தமிழ் சினிமாவில் உச்சகட்ட மாஸ் நடிகர் என்றால் ரஜினிக்கு பிறகு அஜித் விஜய் தான் இவர்களுக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளத்தை யாராலும் கணிக்க முடியாது, இவர்கள் இருவரையும் சினிமா பிரபலங்களுக்கும் பிடிக்கும், இவர்களுக்கு சினிமாவில் இருக்கும் மாஸ் வேற எந்த நடிகருக்கும் வருமா என்றால் அது சந்தேகம்தான்.

ajith vijay
ajith vijay

தல தளபதி இருவரும் நண்பர்களாக தான் பழகிவருகிறார்கள் நண்பர்களாக தான் வெளியில் காட்டிகொள்கிறார்கள் ,அனால் இவர்களின் ரசிகர்களோ இன்னும் சண்டை போட்டு கொள்கிறார்கள் தற்பொழுது இந்த இரண்டு நடிகர்களுடன் இந்த நிலையில் இவர்களுடன் பணியாற்றிய நடன இயக்குனர் லலிதா ஷோபி இவர்களை பற்றி பல சுவாரசியமான தகவலை கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது இவர்கள் இருவருமே மிகசிறந்த நடிகர் அனைவரிடமும் அன்பாக பழகக்கூடியவர் இவர்கள் இருவரையும் எனக்கு பிடிக்கும் நடிகர் விஜய் எப்பொழுதும் அமைதியாக கொஞ்சம் ஜாலியாக இருப்பார், ஆனால் அஜித் எப்பொழுதும் ஜாலியாக இருப்பார் ஆனால் அமைதியாக இருப்பது போல் அனைவருக்கும் தெரியும்.

நடிகர் அஜித் அவரதது உடம்பில் எவ்வளவு பிரச்சனை இருக்கிறது, பல ஆப்ரேஷன் பண்ணியுள்ளார் அதனால் நடனத்தின் பொழுது சில மூவ்மெண்டை குறைத்து கொள்ளலாம் என நினைப்போம், ஆனால் தல அஜித் அப்படி நினைக்கவே விடமாட்டார் என்னால் முடியும் எனது ரசிகர்களுக்காக நான் கண்டிப்பாக அதை செய்வேன் என கூறுவாராம்.

அதேபோல் விஜய்யும் தன்னிடம் ரசிகர்கள் எதை ரசிக்கிறார்கள் விரும்புகிறார்கள் என தெரிந்துக்கொண்டு, பாடலுக்கு என்ன கடினாமான நடனமாக இருந்தாலும் நான் செய்கிறேன் என கூறுவாராம். ஏன் என்றால் விஜய் டான்ஸ் என்றால் அனைவருக்கும் பிடிக்கும் அதனால் டான்ஸ் விஷயத்தில் எதுவாக இருந்தாலும் அப்படியே செய்ய தயாராகிவிடுவாராம். தற்பொழுது ஆளப்போறான் பாடலுக்கு நடனம் அமைத்ததற்காக பல விருது கிடைத்ததாக ஷோபி தெரிவித்தார்.