கமல்ஹாசன் பிரபல தொலைக்காட்சியில் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றார். இந்த நிகழ்ச்சிக்கு பல எதிர்ப்பு இருந்தாலும், TRP விஷயத்தில் உச்சத்தில் தான் இருக்கின்றது.

இந்நிலையில் மன்சூர் அலிகான் மிகவும் கோபமாக ‘வேலையில்லாத நடிகர், நடிகைகள் 100 நாள் வேலை திட்டம் போல் அதில் நடிக்கின்றனர்.

ஆனால், கமல்ஹாசன் போன்ற முன்னணி நடிகர் இப்படி ஒரு நிகழ்ச்சியை நடத்துவது மனதிற்கு கஷ்டமாக உள்ளது.

அந்த நிகழ்ச்சி நடக்கும் நேரத்தில் திரையரங்கிற்கு வரும் கூட்டம் குறையும், இதே கமல் படம் ரிலிஸாகும் நேரத்தில், அஜித், விஜய் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தினால் எப்படியிருக்கும்.

அவர் படத்தின் வசூல் பாதிக்கப்படும் தானே, கண்டிப்பாக கமல் யோசிக்க வேண்டும்’ என்று மன்சூர் கூறியுள்ளார்.