கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்தவர் அசின். குஞ்சக்கோ போபன் நடித்த ‘நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வகா’ என்ற மலையாளப் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

asin

2001ஆம் ஆண்டு இந்தப் படம் வெளியானது. ஜெயம் ரவி ஜோடியாக ‘எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான அசின், ‘கஜினி’, ‘போக்கிரி’, ‘தசாவதாரம்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

asin

5 தெலுங்குப் படங்களிலும் நடித்துள்ள அசின், ‘கஜினி’ படத்தின் மூலம் ஹிந்தியில் அறிமுகமானார். பின்னர், அங்கேயே அவர் செட்டிலாகிவிட்டார்.

விஜய் ஜோடியாக நடித்த ‘காவலன்’ படம்தான், அவர் நடித்த கடைசி தமிழ்ப் படம். ஹிந்தியில் கடைசியாக ‘ஆல் இஸ் வெல்’ படத்தில் நடித்தார். இந்தப் படம் 2015ஆம் ஆண்டு வெளியானது.

asin

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ராகுல் சர்மாவுக்கும், அசினுக்கும் திருமணம் நடைபெற்றது. மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராகுல் சர்மா என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களுக்கு, நேற்று அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இதை, ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் ராகுல் சர்மா.