விடாமுயற்சி படத்தை அஜித்திற்காக எல்லோரும் பார்க்க வேண்டும் என பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.
சினிமாவில் அஜித்துக்கு பெரியளவில் ரசிகர்கள் உள்ளனர். எனவே அவரது ஒவ்வொரு படத்திற்கும் பெரும் எதிர்பார்ப்பு இருக்கும், அந்த வகையில், வலிமை படத்திற்குப் பின் ரசிகர்கள் அடிக்கடி கேட்டு வருவது விடாமுயற்சி படத்தின் அப்டேட். இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
அஜித்குமார் நடிப்பில், மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் படம் விடாமுயற்சி. இப்படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜூன், ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் அஜர்பைசான், ஜார்ஜியா உள்ளிட்ட நாடுகளில் தொடர்ந்து ஷூட்டிங் நடைபெற்றது.
இப்படத்தின் ஷூட்டிங்கை முடித்துக் கொண்டு அஜித்குமார் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். எனவே விடாமுயற்சி படம் எப்போது ரிலீசாகும், இப்படத்தின் அடுத்த அப்டேட் எப்போது? எனக் கேட்டு ரசிகர்கள் குடைச்சல் கொடுத்து வருகின்றனர்.
ஹாலிவுட் ஸ்டைலில் ஆக்சன், த்ரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் எனவும் அஜித்தின் அதிரடி ஆக்சனை இப்படத்தில் பார்த்து மகிழலாம் என படக்குழுவினர் தெரிவித்தனர். தற்போது இப்படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் நடந்து வரும் நிலையில், இப்படத்தில் நடித்த அனுபவத்தை ரெஜினா கசாண்ரா பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: ’’விடாமுயற்சி படத்தை மகிழ்திருமேனி பெரியளவில் எடுத்துள்ளார். அஜித்துடன் நடிப்பது இதுதான் முதன்முறை. அவரை எல்லோரும் சந்திக்க வேண்டும். அந்தளவுக்கு அஜித் வசீகரமானவர். இதற்கு முன் இதை நான் யாரிடமும் கூறியதில்லை. இப்படத்தில் என் கேரக்டர் வித்தியசமானது. இதற்கு முன் இதுபோல் எந்தப் படத்திலும் பண்ணியதில்லை.
இப்படத்தில் எனக்கு அமைந்த கேரக்டர் எனக்கு தன்னம்பிக்கை கொடுத்தது’’ என்று தெரிவித்துள்ளார். இப்படத்தில் ஏற்கனவே த்ரிஷா உள்ள நிலையில், ரெஜினா இப்படத்தில் வில்லனாக நடித்திருக்கும் அர்ஜூனுக்கு ஜோடியாக நடித்துள்ளதாகவும், 2 வது வில்லனாக ஆரவ் இப்படத்தில் மிரட்டி இருப்பதாகவும் தகவல் வெளியாகின்றன.
இப்படத்தின் அப்டேட் கேட்டு வந்த ரசிகர்கள் அஜித்துடன் இணைந்து நடித்த ரெஜினாவே அஜித் பற்றியும், இப்படத்தைப் பற்றியும் கூறியுள்ளது அஜித் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் நிச்சயம் ரூ.500 கோடிக்கு மேல் வசூல் குவிக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
அவசரப்பட்டு வாய்விட்ட ரெஜினாவை விடாமல் துரத்தும் விடாமுயற்சி டீம்.. கேரக்டர் அப்டேட் பற்றி உளறல்
- Advertisement -