2 வருடம் கழித்து வெளியான விடாமுயற்சி வசூல் இவ்வளவு தானா.! முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

vidaamuyarchi-ajith
vidaamuyarchi-ajith

Vidaamuyarchi First Day Collection: அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கிய விடாமுயற்சி நேற்று வெளியானது. லைக்கா தயாரிப்பில் த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலர் படத்தில் நடித்துள்ளனர்.

இரண்டு வருட தாமதத்திற்கு பின் வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அதிலும் அஜித் ரசிகர்கள் இதை நேற்று திருவிழா போல் கொண்டாடினர்.

தமிழகம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தியேட்டர்கள் கலை கட்டியது. இதனால் முதல் நாள் வசூல் பல சாதனைகளை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போது வெளிவந்துள்ள தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனென்றால் விடாமுயற்சி தமிழகத்தை பொறுத்தவரையில் 24 கோடிகளை மட்டுமே வசூலித்துள்ளது.

முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

உலக அளவை பொருத்த வரையில் 40 கோடி வசூலாகி இருக்கிறது. இதற்கு காரணம் என்ன என்று பார்க்கையில் படம் ரிலீஸ் ஆனது வேலை நாட்களில்.

விடுமுறை நாட்களாக இருந்திருந்தால் நிச்சயம் கலெக்ஷன் டபுள் மடங்காக இருந்திருக்கும். ஆனாலும் இந்த வார இறுதி நிச்சயம் பாசிட்டிவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனென்றால் தற்போது படம் பற்றி பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. அதிலும் பெண்களுக்கு இப்படம் பிடிக்கும் என சோசியல் மீடியாவில் வைரலான கருத்துக்கள் உள்ளது.

அதனால் சனி ஞாயிறுகளில் நிச்சயம் வசூல் ஏறுமுகமாக இருக்கும். இருப்பினும் படம் 100 கோடி கிளப்பில் இணையுமா என்ற சந்தேகம் ஒரு பக்கம் இருக்கிறது.

Advertisement Amazon Prime Banner