fbpx
Connect with us

Cinemapettai

அஜித் வெங்கட் பிரபு மீண்டும் இணைந்தால் படம் ஃபிளாப் தான்.! ரசிகரின் பதிவிற்கு தரமான பதிலடி கொடுத்த வெங்கட் பிரபு

News | செய்திகள்

அஜித் வெங்கட் பிரபு மீண்டும் இணைந்தால் படம் ஃபிளாப் தான்.! ரசிகரின் பதிவிற்கு தரமான பதிலடி கொடுத்த வெங்கட் பிரபு

வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நேர்கொண்ட  பார்வை இந்த திரைப்படத்தின் டிரைலர் நேற்று மாலை 6 மணிக்கு வெளியாகியது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.

இந்த நிலையில் நேர்கொண்ட பார்வை டிரைலரை பார்த்த பல சினிமா பிரபலங்கள் படக்குழுவிற்கும், அஜித்திற்கும் வாழ்த்துக் கூறினார்கள் அந்த வகையில் இயக்குனர் வெங்கட்பிரபுவும் தனது வாழ்த்தை தெரிவித்தார்.

அப்போது இந்த பதிவை பார்த்த ஒரு ரசிகர் வெங்கட் பிரபுவிடம் மீண்டும் அஜித்  வெங்கட் பிரபு கூட்டணி எப்போது என கேட்டுள்ளார், அதற்கு மற்றொரு ரசிகர் திரும்பவும் வெங்கட்பிரபு அஜித் கூட்டணி வைத்தால் படம் ஃபிளாப் ஆகும் என வெங்கட்பிரபுவுக்கு தெரியும். மேலும் வெங்கட்பிரபு கிட்ட  ஒழுங்கான கதை இல்லை என கூறியிருந்தார்.

இதனை பார்த்த வெங்கட் பிரபு சற்றும் யோசிக்காமல் ‘வச்சிக்கிட்டா வஞ்சனை பண்றேன் என்னைக்கு என்கிட்ட கதை இருந்திருக்கு ‘ என நக்கலாக பதிலடி கொடுத்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top