நடிகை கனிகா என்பவர் மதுரையில் 1982 ல் பிறந்தார் இவரின் அப்பா அம்மா இருவருமே இன்ஜினீயர்கள் இவர் படிப்பில் மிகவும் திறமைச்சாளி இவர் 12 ம வகுப்பு தேர்வில் சிறந்து விளங்கியதால் இவருக்கு தமிழ் நாடு அரசு விருது கொடுத்தது அதுமட்டும் இல்லாமல் தமிழக அரசு சார்பில் இவருக்கு மெரிட் வழங்கி ராஜஸ்தானில் பிட்ஸ் பிலானி கல்லூரியில் தனது பொறியியல் படிப்பை படித்தார் அதிலும் அவர் மெக்கானிகல் இன்ஜினியர் ஆவார்.

Kaniha

இவருக்கு படிப்பை தவிர பாடுவதில் மிகவும் ஆர்வம் உண்டு இதனால் இவரை மிஸ் சென்னை அழகி போட்டியில் பாடுவதற்கு 2001ல் அழைத்தார்கள், அதில் என்ன சுவாரசியம் என்றால் அந்த போட்டியில் ஒரு மாடல் வராததால் பாட வந்த இவர் அந்த போட்டியில் கலந்து கொண்டுள்ளார்.

Kaniha

இதில் என்ன ஆச்சிரியம் என்றால் அவர் இந்த போட்டியில் பட்டமும் வென்றுள்ளார் அதனால் இவரை நோக்கி பட வாய்ப்புகள் படையெடுத்து வந்தன, இதன் விளைவாக 2002 ல் இயக்குனர் மணிரத்னம் தயாரிப்பில் 5 ஸ்டார் படத்தில் நடிகர் பிரசன்னாவிற்கு ஜோடியாக நடித்தார்.

Kaniha

அதன் பின்பு இவருக்கு வந்த பட வாய்ப்புகள் அனைத்தும் பெரிய இயக்குனர்களிடம் இருந்து வந்தது ஆனால் அவர் நான் படிப்பை முடித்துவிட்டு தான் நடிப்பேன் என பட வாய்ப்புகளை மறுத்து வந்தார் கனிகா. பின்பு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழியில் 50 க்கும் மேல் படத்தில் நடித்துவிட்டார் கனிகா.

Kaniha

தமிழில் எதிரி, ஆட்டோகிராப், வரலாறு ஆகிய படங்களில் நடித்தார் கனிகா. அதன் பின்பு தனது 26 வயதில் ஷியாம் ராதாகிருஷ்ணன் என்ற அமேரிக்கா சாப்ட்வேர் இன்ஜினியரை திருமணம் செய்துகொண்டார் இவர்களுக்கு கடந்த 2010ஆம் ஆண்டு சாய் ரிஷி என்ற மகன் பிறந்தான்.

Kaniha

திருமணத்திற்கு பிறகு நடிப்பிற்கு முழுக்கு போட்டுவிட்டார் என நினைத்தபொழுது தொடர்ந்து பல படத்தில் நடித்து வருகிறார் கனிகா தற்பொழுது க்ரீன் ஆப்பிள், இ-டைரி போன்ற மலையாள படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்து வருகிறார்.