Tamil Cinema News | சினிமா செய்திகள்
அஜித் சொல்லியும் அவரையே அசிங்கப்படுத்திய மிர்ச்சி சிவா.. செம கடுப்பில் தல
தல அஜித் பெரும்பாலும் தன்னை சார்ந்தவர்களிடம் அதிகம் கோபப்பட மாட்டார் என்ற தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்தன.
ஆனால் அஜித்தின் உறவினராக கருதப்பட்ட நடிகரான மிர்ச்சி சிவா மீது தற்போது செம கடுப்பில் உள்ளாராம் தல அஜித்.
அதற்கு காரணம் அஜித் ஒரு விஷயத்தை செய்ய வேண்டாம் என்று சொல்லியும் அதனை கண்டுகொள்ளாமல் வேண்டுமென்றே அஜித்தை அசிங்கப்படுத்தியதாக வலைப்பேச்சு நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
மிர்ச்சி சிவா நடிப்பில் ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்ற திரைப்படம் என்றால் அது சிஎஸ் அமுதன் இயக்கத்தில் வெளிவந்த தமிழ் படம் மற்றும் தமிழ் படம் 2 தான்.
இயக்குனர் சி எஸ் அமுதன் அஜித்தின் மச்சினர் ரிச்சர்ட்டின் மிகவும் நெருங்கிய நண்பராம். தமிழ் படம் 2 படத்தை பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது தல அஜித்தை கிண்டல் செய்வது போன்ற காட்சி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதை அப்படியே ரிச்சர்ட் தல அஜித்திடம் சொல்ல உடனடியாக அந்த காட்சியை நீக்குமாறு தெரிவித்தாராம் தல. ஆனால் படக்குழுவினர் அதை கண்டுகொள்ளாமல் தமிழ் படத்தில் தல அஜித்தை கிண்டல் செய்து காட்சிகள் வைத்துள்ளனர்.
நான் இவ்வளவு சொல்லியும் வேண்டுமென்றே அந்த காட்சியை வைத்தால் என்னுடைய பேச்சுக்கு என்ன மரியாதை என மிர்ச்சி சிவா மீது செம கடுப்பில் உள்ளாராம் தல அஜித்.
இதனால் தமிழ் படம் 2 வெளியானதிலிருந்து மிர்ச்சி சிவாவிடம் பேசுவதை நிறுத்தி விட்டாராம். மிர்ச்சி சிவாவின் மனைவி ஷாலினியின் நெருங்கிய நண்பர் என்பதால் மிர்ச்சி சிவா தல அஜித்தின் தம்பி போல் இருந்து வந்ததாகத் தகவல் கிடைத்தது.

ajith-siva-cinemapettai
