Tamil Cinema News | சினிமா செய்திகள்
இந்த படத்தின் கதை பிடிக்கவில்லை.. இருந்தும் உங்களுக்காக நடிக்கிறேன்.. தல அஜித்
தமிழ்சினிமாவில் தல அஜித்துக்கு என்று ஒரு தனி இடம் உள்ளது. உழைப்பால் உயர்ந்து எக்கச்சக்க ரசிகர்களை கொண்டுள்ளவர். அஜித் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை ஆகிய இரு படங்களும் வசூல் ரீதியாக பெரிய வெற்றியைப் பெற்றது.
இந்நிலையில் தல அஜித் வளர்ந்து கொண்டிருந்த காலத்தில் லிங்குசாமி அவர்களின் ஜி படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்தப் படத்தின் கதை சூட்டிங் செல்வதற்கு முந்தைய நாள்தான் தல அஜித்க்கே தெரியும் என சமீபத்திய பேட்டி ஒன்றில் லிங்குசாமி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படத்தின் கதை அஜித்துக்கு பிடிக்கவில்லை எனவும், தயாரிப்பாளர் தரப்பு கேட்டுக்கொண்டதால் அஜித் நடித்துக் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
தல அஜித் லிங்குசாமியிடம் இந்த கதையின் மீதும் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா என கேட்டதாகவும், அதற்கு விருப்பமே இல்லாமல் வேறு வழியின்றி நம்பிக்கை இருக்கு என தான் கூறியதாகவும் லிங்குசாமி சமீபத்திய பேட்டியில் பதிவு செய்துள்ளார்.
தல அஜித் சொன்னதுபோல் தல அஜித்தின் கேரியரில் ஜி படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
