சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் புதுப்படம் உறுதியாகி விட்டது.

இப்போதைக்கு ‘AK 57′ என்று டம்மியாக டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் பூஜையை அஜித்துக்கு செண்டிமெண்ட் கோவிலாக சாய்பாபா கோவிலில் மிக எளிமையாக பூஜை போட்டனர். பூஜை தான் வேகம் எடுத்ததே தவிர படப்பிடிப்பு வருகிற ஆக்ஸ்ட் மாதம் தான் தொடங்க இருக்கிறது.

முழுக்க முழுக்க வெளிநாடுகளில் தயாராகும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பல்கேரியாவின் ஆரம்பமாகிறது.

படத்தின் அஜித்துக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் இப்போது அவரும் சந்தேக லிஸ்ட்டில் தான் இருக்கிறாராம். ஆகவே எந்த நேரத்திலும் நாயகி மாறினாலும் மாறலாம்.

அதேபோல பிரபல மலையாள நடிகை சாய் பல்லவியை ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்க பேச்சு வார்த்தை நடைபெற்றது. அவரோ தெலுங்குப் படம் ஒன்றுக்கு தேதிகளை கொடுத்து விட்டதால் நடிக்க மறுத்து விட்டார்.

காமெடிக்கு கருணாகரன் இருக்க, படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலை இந்த ஆண்டு இறுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். 2017 பொங்கலுக்கு படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.