ajith-siva‘வீரம்’, ‘வேதாளம்’ படக் கூட்டணியான அஜித் – சிவா இருவரும் மீண்டும் இணைந்து படம் பண்ண ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். சத்யஜோதி நிறுவனம் இப்படத்தை தயாரிக்க இருக்கிறார். அனிருத் இசையமைக்க இருக்கும் இப்படத்துக்கு வெற்றி ஒளிப்பதிவாளராக ஒப்பந்தமாகி இருக்கிறார்.

அதிகம் படித்தவை:  விவேகம் திரைப்படம் ரிலீஸ்,ஆத்திரத்தில் ரசிகர்கள் ஆவேசம்,போலீஸ் அடிதடி.

“நாளை (வியாழக்கிழமை) அஜித்தை சந்தித்து அதிகாரப்பூர்வ ஒப்பந்தத்தை கையெழுத்திட இருக்கிறார்கள். இப்படத்தை ஜூலை மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்கள்” என்று படக்குழு சார்பில் தெரிவித்தார்கள்.

அதிகம் படித்தவை:  வேதாளம் படத்தலைப்புக்கு போட்டியாக வில்லங்கமான தலைப்பு வைக்கும் வில்லன் நடிகர்

இப்படத்தில் அஜித்துடன் நடிக்க இருப்பவர்கள் தேர்வு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு நடைபெறுவதைப் பொறுத்து படத்தின் வெளியீட்டை முடிவு செய்ய படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.