தல அஜித் நடித்து வரும் ‘அஜித் 57’ படத்தின் படப்பிடிப்பு பெல்ஜியம் நாட்டில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஆரம்பித்து தற்போது விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு நாட்களில் ஒருசில காட்சிகள் படமாக்கப்பட்ட பின்னர் இன்று முதல் ஆக்சன் காட்சியின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

அதிகம் படித்தவை:  தல57 படத்தில் அஜித்துடன் நடிக்கும் ஜில்லா நடிகர்? ரசிகர்கள் உற்சாகம்

தொடர்ச்சியாக 25 நிமிடங்கள் சேஸிங் மற்றும் ஆக்சன் காட்சிகள் திரையில் தோன்றும் வகையில் இந்த காட்சிகள் அமையவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். தென்னிந்திய சினிமாவில் 25 நிமிடங்கள் தொடர்ச்சியாக ஆக்சன் காட்சிகளுடன் கூடிய முதல் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் படித்தவை:  மே 1 அஜித்தின் புகழ் பாடும் "எங்க குல தங்கம், எங்க தல சிங்கம்" அதிகாரபூர்வ அறிவிப்பு.!

அஜித், காஜல் அகர்வால், அக்ஷராஹாசன், கருணாகரன், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ள இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கின்றது.