அஜித் நடிக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு பல்கேரியா நாட்டில் அடுத்த வாரம் தொடங்கவுள்ளதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்புக்காக ஏற்கனவே டெக்னிக்கல் டீம் பல்கேரியா சென்றுவிட்டதாகவும் வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் சற்று முன்னர் பல்கேரியா விமான நிலையத்திற்கு அஜித் சென்று அடைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது. பல்கேரிய விமான நிலையத்தில் அஜித்துடன் ரசிகர்கள் எடுத்து கொண்ட புகைப்படங்கள் இணையதளத்தில் பரபரப்பாக வலம் வந்து கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் இந்த படத்தின் நாயகி காஜல் அகர்வால் இன்று அல்லது நாளை பல்கேரியாவுக்கு செல்வார் என்றும் ஆகஸ்ட் 2 அல்லது 3ஆம் தேதி இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.