புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

தொந்தரவு பண்ணாதீங்க! புடிச்ச நானே கூப்பிடுவேன்.. AK அப்போவே அப்படி, இப்போ கேக்கவா வேணும்

விடாமுயற்சி அப்டேட் கேட்டு சளித்து போன ரசிகர்கள், தற்போது குட் பேட் அக்லீ படத்தை தான் மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகும் விடாமுயற்சி திரைப்படத்தில் ஒரே ஒரு பாடல் காட்சி மட்டும் தான் படமாக்கப்பட இருக்கின்றதாம். அப்பாடல் காட்சி முடிந்துவிட்டால் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவுபெறுமாம. எப்போது முடிப்பார்கள் என்பது அந்த ஆண்டவனுக்கு தான் தெரியும்..

இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாவதாக இருந்த குட் பேட் அக்லி திரைப்படம் தள்ளிப்போக இருக்கின்றதாம். அநேகமாக விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் ஏப்ரல் மாதத்திலும் வெளியாகும் என தெரிகின்றது. பொங்கலுக்கு அஜித் படத்தை எதிர்பார்த்த ரசிகர்கள் மீண்டும் ஏமாற்றமே அடைந்துள்ளனர்.

தற்போது இவ்வளவு பெரிய நடிகராக அஜித் வளர்ந்து நிக்கிறார் என்றால் அதற்க்கு வித்திட்டது என்னவோ, இயக்குனர் சரவணன் சுப்பையா தான். அவர் ஆரம்பகட்டத்தில் இருக்கும்போது, தரமான சிடிஸன் படத்தை கொடுத்த ஒரு இயக்குனர். இந்த நிலையில் அவர் கூறிய சில தகவல்கள் தற்போது வைரலாகி வருகிறது.

அப்போவே அப்படி

அந்த காலகட்டத்தில் அஜித்தின் திரைப்பயனத்திலேயே அதிக பொருட்ச்செலவில் உருவான திரைப்படம் தான் சிட்டிசன். வித்யாசமான கெட்டப்கள், அழுத்தமான கதைக்களம், அசத்தலான நடிப்பு என சிட்டிசன் திரைப்படத்தில் அனைத்துமே சிறப்பாக அமைந்தது.

“இன்றைய தலைமுறையினரும் ரசிக்கும்படியான ஒரு படமாகவே இருக்கிறது. ஆனால் முதலில் இந்த கதையை நான் அஜித்திடம் கூற முயற்சி செய்தபோது, நடந்த கதையே வேறு. அப்போது அவர் முகவரி படப்பிடிப்பில் இருந்தார். கதையை ஆங்கிலத்தில் சுருக்கமாக எழுதி தருமாறு கூறினார்”

“கதை பிடித்தால் நானே அழைப்பேன். அதுவரை என்னை தொந்தரவு பண்ணக்கூடாது. கதை பிடித்துப்போனால் நானே போன் செய்து உங்களை கூப்பிடுவேன். அதுவரை பொறுமையாக இருங்கள்” என சரவணன் சுப்பையாவிடம் கூறினாராம். சில நாட்கள் கழித்து அஜித்திடமிருந்து போன் கால் வந்ததாம்.

அவருக்கு கதை மிகவும் பிடித்திருத்ததாம். இதை கேள்வி பட்ட ரசிகர்கள்.. “தல அப்போவே அப்படி தான் போல.. attitude அதிகம் தான்.. ” என்று கூறி வருகின்றனர்.

- Advertisement -

Trending News