fbpx
Connect with us

Cinemapettai

முதல்ல அவங்கள கூப்பிடுங்க.. கொரானாவுக்காக களமிறங்கும் அஜித் டீம்

ajith

Tamil Nadu | தமிழ் நாடு

முதல்ல அவங்கள கூப்பிடுங்க.. கொரானாவுக்காக களமிறங்கும் அஜித் டீம்

இந்திய அளவில் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மக்கள் தாங்களாகவே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டுமென்று மாநில அரசு அறிவித்து வருகிறது. இந்தியாவில் இன்று காலை நிலவரப்படி கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் 674 பேர், அதில் 43 பேரை காப்பாற்றி உள்ளனர்.

இந்த சூழ்நிலையில் வைரஸ் பரவாமல் இருப்பதற்கு சுகாதாரத்துறை மருந்துகளை தெருக்களில் தெளித்து வருகிறது. மக்கள் பாதுகாப்பிற்காக 144 தடை விதிக்கப்பட்டுள்ளது, ஆனால் இதனை ஒரு சில பேர் சாதாரணமாக எடுத்துக்கொண்டு தெருக்களில் கூட்டம் கூட்டமாக நின்று பேசிக் கொண்டிருக்கின்றனர்.

இதற்காகத்தான் நாம் அண்டை மாநிலங்களில் போலீசார் அடித்து விரட்டுகின்றனர், அந்த வீடியோ நமது சமூக வலைத்தளத்திலும் வைரலாகி வருகிறது. இந்த சூழ்நிலையில் மக்களை காப்பாற்றும் பணியில் தல அஜித் மற்றும் அவரது குழு இணைந்து செய்த ட்ரான் உபயோகப்படுத்த உள்ளதாம்.

Dhaksha-Air-Taxi-Ajithkumar

அதாவது சென்னையில் RGGG மருத்துவமனையில் கொரோனா பாதிக்கப்பட்ட வார்டுகளில் மருந்து தெளிப்பதற்கு, அஜித்குமார் தலைமையில் MIT மாணவர்கள் தயாரித்த ஆள் இல்ல விமானம் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் ஒத்திகை பார்க்கப்பட்டு வருகிறது. இதனை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பார்வையிட்டு உள்ளார்.

வாகன நெரிசல் அதிகமாக இருப்பதால் மருத்துவ அவசர சிகிச்சைக்காக ஆள் இல்ல விமானத்தை உபயோகப்படுத்தலாம் என்று இருந்தனர். தற்போது தல அஜித் தயாரித்துள்ள இந்த ட்ரான் வைரஸில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக பயன்படுகிறது.

vj-baskar

vj-baskar

அவரு வெளிய வரலனு சொல்றவங்களுக்கு.! அவரு வெளியவர தேவையில்ல அவரு செஞ்ச சேவை மக்களிடையே எல்லா இடமும் பயனுள்ளதா போய் சேர்ந்துருக்கு அதுவே போதும் என்று சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர்.

இதனை பார்த்து அதிகமான லைக்ஸ் மட்டும் ஷேர் செய்து வருகின்றனர், அஜித் மற்றும் அவரின் குழுவினர்களுக்கு சமூக வலைத்தளத்தில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top