Tamil Cinema News | சினிமா செய்திகள்
அன்றே கணித்த சூர்யா போய் அன்றே கணித்த அஜித் வந்தது.. கிரிக்கெட்டில் எதிர்காலத்தில் நடப்பதை புட்டு புட்டு வைத்த தல!
நம்ம தமிழ் நாட்டில் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று கேட்டால் விஜய் ரசிகர்கள் விஜய் என்றும் அஜித் ரசிகர்கள் அஜித் என்றும் மாத்தி மாத்தி பேசிக்கொண்டே இருப்பார்கள். அது எல்லாருக்கும் தெரிந்த ஒன்று.
நடிகர் அஜித் ஒரு நல்ல நடிகர். ஏனென்றால் அவர் நடித்த பல படங்கள் அவருக்கு வெற்றியை பெற்று கொடுத்துள்ளது.
தமிழ் சினிமாவில் இவர் மிகவும் கடினமான உழைப்பை சினிமாவில் ரசிகர்களுக்காக காட்டியுள்ளார் அஜித் குமார்.
இவருக்கு நடிக்க மட்டும் தான் தெரியும் என்று எல்லோரும் நினைக்கலாம். ஆனால் நடிகர் அஜித் குமார் பல ஆண்டுகளுக்கு முன் ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில் எதிர்காலத்தில் T20 கிரிக்கேட் போட்டிதான் மிகப்பெரிய அளவில் இருக்கும் என்று பதிலளித்தார் நடிகர் அஜித்குமார்.
இப்பொழுது நடிகர் அஜித் குமார் பதில் அளித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.
