Connect with us

Cinemapettai

சொல்ல சொல்ல கேட்காமல் அஜித் செய்த வேலை.. கண் கலங்கிய வினோத்

valimai-ajith

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சொல்ல சொல்ல கேட்காமல் அஜித் செய்த வேலை.. கண் கலங்கிய வினோத்

தல அஜித் தற்போது இரண்டாவது முறையாக எச். வினோத் இயக்கத்தில் வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறார்.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தை அடுத்த வருட தீபாவளிக்கு வெளிக்கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளது. ஹாலிவுட் தரத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த படமாக உருவாகி வரும் இந்த படத்தில் ஏகப்பட்ட ரிஸ்கான ஸ்டண்ட் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாம்.

இந்நிலையில் ஹைதராபாத்தில் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே. படத்தில் ஒரு காட்சிக்காக தல அஜித் 100 அடி உயரத்திலிருந்து குதிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாம்.

ஆனால் வினோத்துக்கு இதில் அஜித் நடிக்க உடன்பாடு இல்லை. ஆகையால் உடனடியாக டூப் போட்டு எடுக்கலாம் என முடிவெடுத்து அதற்கான வேலையை செய்தாராம். ஆனால் டூப் போடுவதை முற்றிலும் தவிர்த்து விட்டாராம் தல அஜித்.

எவ்வளவு பெரிய ரிஸ்க் ஆக இருந்தாலும் நான் மட்டுமே எடுப்பேன் என ஒற்றைக்காலில் நின்றுள்ளார். மேலும் வேணாம் என சொன்னதுக்கு தல அஜித், தன் படத்துக்காக இன்னொருவர் ரிஸ்க் எடுப்பதை விரும்பவில்லை எனவும், ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் அது என்னுடனே போகட்டும் எனவும் இயக்குனருக்கு தைரியம் சொல்லி விட்டாராம்.

இதனால் வினோத் பூரிப்பில் என்ன பேசுவது என்று தெரியாமல் வியந்துபோய் தல அஜீத்தை பார்த்து உள்ளார் என படக் குழுவில் இருந்து அரசல் புரசலாக செய்திகள் வெளிவந்தன. விரைவில் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top