தற்போது அஜித் “விவேகம்” படத்தில் பயங்கர பிசியாக இருக்கிறார். தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைந்து விட்டார் என்றவுடன், அவர் மீதிருந்த பிரியத்தின் காரணமாக, அப்போது பல்கேரியாவில் ஷூட்டிங்கில் இருந்த அஜித் உடனடியாக சென்னை திரும்பினார். ஆனாலும், அவரால் இறுதி அஞ்சலியில் கலந்துக்கொள்ள முடியவில்லை.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நல்லடக்கம் செய்த பிறகு, அவரின் சமாதியில் நடிகர் அஜித் குடும்பத்தினருடன் சென்று அஞ்சலி செலுத்தினார்.

ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்தவராக அஜித் இருந்தார். இன்னும் சொல்லப்போனால், அதிமுகவின் அடுத்த வாரிசாகக்கூட அஜித்தை சம்பந்தப்படுத்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரப்பிவந்தனர். ஏன் அடுத்த முதல்வராகக்கூட வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது.

அதிமுகவின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்க சசிகலா மும்முரம் காட்டி வந்தபோதே, சசிகலாவை அஜித் சந்தித்தார் என்றார்கள். ஆனால், அப்படி ஒரு சந்திப்பு நிகழவில்லை என்று கூறப்பட்டது.

இப்போது சசிகலா முதல்வராக அதிமுகவின் பல்வேறு மூத்த நிர்வாகிகளும், அமைச்சர்களும் ஆதரவளித்துவருகின்றனர். ஆனால், முதல்வராக இருக்கும் பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கி உள்ளார்.

இந்த சூழலில், அஜித்தின் ஆதரவு சசிகலாவுக்கா? அல்லது ஓபிஎஸ்சுக்கா? என்றால், அஜித்துக்கு எப்போதுமே விசுவாசிகளை தான் பிடிக்குமாம். அதனால் அஜித் வாய் திறக்காவிட்டாலும் அவர் சாய்ஸ் ஓபிஎஸ் என்று சொல்லுகிறார்கள் சம்பந்தப்பட்டவர்கள்.