தமிழ் சினிமா தற்போதெல்லாம் மெல்ல வேறு தளத்தை நோக்கி பயணிக்கின்றது. காக்கா முட்டை, விசாரணை, மாநகரம், தரமணி என தொடர்ந்து நல்ல படங்கள் வருகின்றது, அதற்கு ரசிகர்களும் தங்கள் முழு ஆதரவை தருகின்றனர். ஆனால், இன்றும் உண்மையாகவே தமிழ் சினிமாவை ஆளுபவர்கள் என்று பார்த்தால் விஜய், அஜித் தான். இவர்கள் படங்களின் போது கிடைக்கும் வரவேற்பை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

இதை பலரும் தங்களுக்கு சாதகமாகவும் பயன்படுத்திக்கொள்கின்றனர், எப்படி என்றால், ஒருவரின் படம் வரும் போது அந்த படத்தை கிழித்து தொங்கவிடுவார்கள், உடனே எதிர்தரப்பு ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக செயல்பட அதை தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் மூன்றாம் உலகப்போரே ஆரம்பிக்கும். ஆனால், விமர்சனம் செய்தவர் ஜாலியாக கால் மேல் கால் போட்டு அமர்ந்து பணத்தை எண்ணிக்கொண்டு இருப்பார், தற்போது அப்படி ஒரு நிகழ்வு தான் விவேகம் படத்தில் நடந்துள்ளது.

ajithவிவேகம் அஜித் ரசிகர்களுக்கான படம் மட்டுமே என்றாலும், வீரம், வேதாளம் அளவிற்கு அஜித் ரசிகர்களுக்கே இந்த படம் பெரிதும் ஈர்க்கவில்லை என்பது உண்மை தான். ஆனால், இதனால் வசூல் 1% கூட குறையவில்லை, கண்டிப்பாக இந்நேரம் ரூ 100 கோடியை வசூல் கடந்திருக்கும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அப்படியிருக்க தற்போது பிரச்சனையே அந்த விமர்சகர் அஜித்தை திட்டிவிட்டார் என்பது தான், இதற்கு பல பிரபலங்கள் கொதித்தெழுந்து தங்கள் ஆதங்கத்தை கூறி வருகின்றனர்.

இதற்கு முன் புலி படத்திற்கும் இப்படி ஒரு விமர்சனம் எழுந்தது, அதற்கு எந்த ஒரு பிரபலமும் வாய் திறந்ததாக தெரியவில்லை, கேட்டால், அவர் அஜித்தை தனிப்பட்ட முறையில் தகாத வார்த்தையில் திட்டினார் என்றார்கள். சரி, அப்படியே வைத்துக்கொண்டாலும் சில வருடங்களுக்கு முன் ஒரு பொதுக்கூட்டத்தில் மேடையில் ஒருவர் மிகவும் மோசமான வார்த்தைகளால் விஜய்யை திட்டினார், அப்போது கேட்டு இருக்கலாமே?. இது நம்முடைய கேள்வி அல்ல, ஒவ்வொரு நடுநிலை ரசிகனின் கேள்வி.

vijay jyothika movieவிஜய், அஜித் என்பவர்கள் சமூக வலைத்தளத்தில் விமர்சிக்க கூடாதவர்கள் அல்ல, ஆனால், ஒரு சிலர் இவர்களை விமர்சித்து பணம் சம்பாதிக்க தொடங்கியுள்ளனர், இதற்கு விஜய், அஜித் இன்றும் தங்களுக்குள் ஒரு ஈகோ மோதல் இருப்பது போல் வெளியே காட்டிக்கொள்வதும் ஒரு காரணம் தான். இப்படி விஜய், அஜித் தங்கள் மார்க்கெட்டை பாதுக்காக்க, ரசிகர்கள் சண்டைப்போட்டுக்கொள்ளட்டும் என்று வேடிக்கை பார்ப்பது இன்னும் பல விளைவுகளை உண்டாக்கும் என்பதில் எந்த ஒரு மாற்றுக்கருத்தும் இல்லை. இனியாவது தலதளபதி ஏதேனும் முடிவு எடுப்பார்களா…?.

ajith-vijay

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here