Tamil Cinema News | சினிமா செய்திகள்
அஜித்தின் மெகா ஹிட் பட ரீமேக்கில் தெலுங்கு சூப்பர் ஸ்டார்.. மரண மாஸ் காட்டும் தல!
தல அஜித்தின் திரைப்படங்கள் அனைத்துமே பெரும்பாலும் மசாலா அம்சங்கள் சேர்ந்த பொழுது போக்கு திரைப்படங்களாக இருப்பதால் எந்த மொழியில் வேண்டுமானாலும் ரீமேக் செய்யலாம்.
அந்த வகையில் கடந்த சில வருடங்களாக தல அஜித் நடிப்பில் நிறைய சூப்பர் ஹிட் திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. அதிலும் குறிப்பாக சிறுத்தை சிவா கூட்டணியில் உருவான படங்களில் விவேகம் படத்தை தவிர மற்ற அனைத்துமே பயங்கர வரவேற்பு பெற்றது.
அதிலும் சமீபத்தில் வந்த விஸ்வாசம் படம் எல்லாம் வேற லெவல் ஹிட். ஆனால் தமிழ்நாடு தவிர தல அஜித்தின் படங்கள் கர்நாடகாவில் மட்டுமே ஓரளவு வரவேற்பை பெற்று வருகிறது.
தெலுங்கில் அஜித்தின் படங்கள் அவ்வளவாக எடுபடுவதில்லை. வீரம் பட ரீமேக் கூட அங்கு பிளாப் தான். ஆனால் அதை மாற்றும் வகையில் தற்போது தல அஜீத்தின் இன்னொரு படம் தெலுங்கில் ரீமேக் ஆக உள்ளது.
தல அஜீத், சுருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில் உருவாகி மெகா ஹிட்டடித்த திரைப்படம் வேதாளம். இந்த படத்தையும் சிறுத்தை சிவா தான் இயக்கி இருந்தார். அனிருத் இசையமைப்பில் பாடல்கள் பட்டையைக் கிளப்பியது.
இந்நிலையில் வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க சிரஞ்சீவி ஆசைப்படுகிறாராம். ஏற்கனவே தளபதி விஜய்யின் கத்தி பட ரீமேக்கை வைத்து தெலுங்கு சினிமாவில் ரீஎன்ட்ரீ கொடுத்து 150 கோடி வசூல் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது அடுத்ததாக தல அஜித் படத்தை குறி வைத்துள்ளார். ஆக மொத்தத்தில் அவர் சொந்த கதையில் நடிக்க மாட்டார் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது. அப்படி நடித்த சைரா நரசிம்ம ரெட்டி படம் அட்டர் பிளாப்.
