Connect with us
Cinemapettai

Cinemapettai

ajith-vijay-mankatha

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தனக்கு வந்த வாய்ப்பை விஜய்க்கு மாற்றிவிட்ட அஜித்.. பொறாமை இல்லாத போட்டி

தமிழ் சினிமாவில் தன்னுடைய ஆரம்ப காலகட்டங்களில் தனக்கு வந்த ஒரு சூப்பர்ஹிட் ரீமேக் பட வாய்ப்பை விஜய்க்கு மாற்றி விட்டதாக ஒரு தகவல் கோலிவுட் வட்டாரங்களில் வெளியாகி விஜய் மற்றும் அஜீத் இருவருக்குமான நட்பு எந்த அளவுக்கு இருந்தது என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

அச்சமயம் தமிழ் சினிமாவில் போட்டி உள்ள நடிகர்கள் என்றால் அது விஜய் மற்றும் அஜீத் மற்றும் தான். இருவரில் யார் டாப்? என்ற போட்டி நடந்துகொண்டிருக்கிறது.

இது இப்போது ஆரம்பித்ததல்ல. கிட்டத்தட்ட இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னாடியே ஆரம்பிக்கப்பட்ட போட்டிதான். ஆரோக்கியமான போட்டியாக ஆரம்பித்தது ஒரு கட்டத்தில் பகையாளி ரேஞ்சுக்கு மாறி தற்போது மீண்டும் நட்பு வட்டாரத்தில் வந்திருக்கிறது.

அந்த வகையில் அஜீத்தின் ஆரம்ப கட்டத்தில் அவருக்கு பத்ரி படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. அந்த கால கட்டங்களில் தமிழ் சினிமாவில் அதிக ரீமேக் படங்கள் வந்து கொண்டிருந்தது.

அந்த படத்தின் கதையை கேட்ட அஜித் இது தன்னைவிட விஜய்க்கு சரியாக இருக்கும் என சொல்லி அனுப்பி வைத்தாராம். அவர் எதிர்பார்த்தது போலவே விஜய்க்கு அந்த படம் ஹிட் லிஸ்டில் சேர்ந்தது.

மேலும் தமிழ் சினிமாவில் அதிக ரீமேக் படங்களில் நடித்த ஒரே நடிகர் விஜய் தான் என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று. அப்படி அவர் ரீமேக் செய்த பல படங்கள் தமிழ் சினிமாவில் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது தான் அதில் சுவாரசியமே. பெரும்பாலான நடிகர்களுக்கு இது அமையாது.

badri-movie

badri-movie

Continue Reading
To Top