நானும் பாலிவுட் நடிகர், நான் தான் பாலிவுட்டின் நம்பர் ஒன் விமர்சகர் என்று தம்பட்டம் அடித்து வருபவர் கேஆர்கே. தினமும் யாரையாவது ஒரு நடிகரை வம்பிழுக்காவிட்டால் தூக்கம் வராது.

இந்நிலையில் அஜீத்தை வம்பிழுத்துள்ளார்.அஜீத் ஜி, பாலிவுட்டில் உங்களை போன்ற வயதான நடிகர் அப்பா கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். தமிழ் மக்கள் உங்களை எப்படி ஹீரோவாக ஏற்றுக்கொண்டுள்ளனர் என்று தெரியவில்லை. விவேகத்திற்காக வாழ்த்துக்கள் என்று ட்வீட்டியுள்ளார் கேஆர்கே.

தமிழக மக்கள் அவரை ஹீரோவாக ஏற்றுக் கொண்டுள்ளனர். நாங்கள் அவர் மீது பாசம் வைத்துள்ளோம். வந்து பாருங்க அவருக்கு இருக்கும் ரசிகர் பட்டாளத்தை மெர்சல் ஆயிடுவீங்க. நெகட்டிவிட்டியை கண்டுக்காதீங்க தல ரசிகர்களே என்று தளபதி ரசிகர் கேஆர்கேவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.


தலய தொடணும்னா எங்கள தாண்டி தொடு பாக்கலாம் தல மெர்சலான ஹீரோ என்று தளபதி ரசிகர் ஒருவர் பொங்கியுள்ளார்.விஜய் ரசிகரா உங்களின் கருத்தை ஒருபோதும் ஏற்க மாட்டேன். தெற்கு பக்கம் அஜீத் சாருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவர் ஒரு ஜென்டில்மேன். அவரின் உருவத்தை பற்றி விமர்சிக்க வேண்டாம் என்று தளபதி ரசிகர் தனது தல பாசத்தை தெரிவித்துள்ளார்.

தலயை பற்றி பேசும் முன்பு அவரின் கடின உழைப்பு மற்றும் படத்தை பாருங்க…அவரை ஹீரோவை தாண்டி நல்ல மனிதராக ஏற்றுக் கொண்டுள்ளோம் என்று தளபதி ரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.