செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

பொங்கல் ட்ரீட் கடவுள் பேன்ஸுக்கு இருக்கா, இல்லையா?. ஆட்டையை கலைக்க காத்திருக்கும் விக்ரம்!

Good Bad Ugly: அஜித் ரசிகர்கள் கடைசியாக தியேட்டரில் கொண்டாடிய படம் கடந்த 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீசான துணிவு. அதை தொடர்ந்து அஜித்தின் அடுத்த படத்தை இயக்கப் போவது யார் என்பதே ஒரு ஆறு மாத காலகட்டத்திற்கு பெரிய கேள்வியாக இருந்தது.

அதன் பின்னர் பட குழு உறுதியான பிறகும் சூட்டிங் ஆரம்பிக்காமல் இருந்தார்கள். ஒரு வழியாக விடா முயற்சி என்று பெயர் வைத்து படத்தின் ஷூட்டிங் அஜர் பைஜான் நாட்டில் ஆரம்பித்தார்கள். அங்கு தட்பவெப்ப நிலை சாதகமாக இல்லாத காரணத்தால் படப்பிடிப்பு தாமதமாவதாகவும் சொல்லப்பட்டது.

ஆட்டையை கலைக்க காத்திருக்கும் விக்ரம்!

இனியும் ரசிகர்களை காத்திருக்க வைக்க கூடாது என உடனே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் இணைந்தார் அஜித் குமார். படத்தின் படப்பிடிப்பு வேலைகளும் பயங்கரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.

ஒரு கட்டமாக படம் பொங்கல் ரிலீஸ் என ஓர் அளவுக்கு உறுதியும் செய்யப்பட்டது. ஆனால் திடீரென திருஷ்டி பட்டது போல் படத்தின் இசை அமைப்பாளர் மாற்றப்பட்டிருக்கிறார். படத்தின் படப்பிடிப்பு 7 நாட்களில் முடிவடைய இருக்கும் நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் மட்டும் தான் பாக்கி என நிம்மதி பெருமூச்சு விட்டார்கள் அஜித்தின் ரசிகர்கள்.

ஆனால் இசையமைப்பாளர் மாற்றப்பட்டு ஜிவி பிரகாஷ் உள்ளே வந்திருப்பதால் மீண்டும் பின்னணி இசைக்கான வேலை நடைபெற்று வருகிறது. குறிப்பிட்ட காலகட்டத்தில் இதெல்லாம் முடிந்தால் தான் குட் பேட் அக்லி படம் திரைக்கு பொங்கலுக்கு வரும்.

அஜித் படம் பொங்கலுக்கு ரிலீசாகும் என்பதால் விக்ரம் நடித்த வீர தீர சூரன் படத்தின் ரிலீஸ் தேதியை முடிவெடுக்காமல் தள்ளிப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். படத்தின் எல்லா வேலையும் முடிந்து விட்டது, அஜித் நடித்த குட் பேட் அக்லி படம் பொங்கல் ரிலீஸ் இல்லை என்று உறுதியாகிவிட்டால் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்து விடுவார்கள்.

- Advertisement -

Trending News