விஜய்க்கு நேர்மாறாக இருக்கும் அஜித்.. கொஞ்சம் கூட சளைக்காமல் செய்யும் பெரிய தியாகம்

தமிழ் சினிமாவின் வசூல் நாயகர்களாக இருக்கும் விஜய், அஜித் இருவருக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. இவர்களுடைய படம் வெளியாகிறது என்றால் அதை அவர்களுடைய ரசிகர்கள் வெறித்தனமாக கொண்டாடித் தீர்த்து விடுவார்கள். சமீபத்தில் வெளியான வலிமை, பீஸ்ட் திரைப்படங்களை கூட ரசிகர்கள் திருவிழாபோல் கொண்டாடினார்கள்.

இந்நிலையில் விஜய், அஜித் இருவரும் தங்களது அடுத்த படங்களில் படு பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள். விஜய்யின் தளபதி 66, அஜித்தின் ஏ கே 61 ஆகிய இரு படங்களின் படப்பிடிப்பும் தற்போது ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விஜய்யை பொருத்தவரை காலை 10 மணிக்கு சூட்டிங் ஸ்பாட் வந்து விட்டார் என்றால் மாலை 6 மணிக்கெல்லாம் கிளம்பி விடுவார். அதற்கிடையில் ஒரு கோடி ரூபாய் கொடுக்கிறேன் என்றாலும் அவர் 6 மணிக்கு மேல் படப்பிடிப்பில் கலந்து கொள்ள மாட்டார் உடனே பேக்கப் செய்து விடுவார்.

தற்போது அஜித் அதற்கு நேர்மாறாக இருக்கிறார். என்னவென்றால் தற்போது உருவாகிவரும் ஏகே 61 திரைப்படம் குறுகிய கால திரைப்படம் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். ஏனென்றால் அஜித் இந்த படத்தை அடுத்து வேறு சில படங்களில் கமிட்டாகியிருக்கிறார்.

அதனால் முடிந்தவரை இந்த திரைப்படத்தை விரைவாக முடித்துக் கொடுப்பது தான் அவருடைய திட்டம் அதனால் இந்தப் படத்திற்காக அஜித் கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு 18 மணி நேரம் கடுமையாக உழைக்கிறாராம். காலையில் 6 மணிக்கு ஷூட்டிங் ஆரம்பித்துவிட்டால் நள்ளிரவு 12 மணிவரை சூட்டிங் நடந்து கொண்டே இருக்கிறதாம்.

மறுநாள் மதியம் ஷூட்டிங் ஆரம்பித்தால் அதற்கு அடுத்த நாள் காலை வரை சூட்டிங் நடக்கிறதாம். இந்நிலையில் அஜித் கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் அந்த காட்சிகளை எல்லாம் மிகவும் ஆர்வத்துடன் நடித்துக் கொடுத்தாராம். அதுமட்டுமல்லாமல் அவர் களைப்படையாமல் மிகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கிறாராம்.

இந்த விஷயத்தை பற்றி தான் தற்போது படக்குழுவினர் மிகவும் பெருமையாக பேசி வருகின்றனர். அவ்வளவு பெரிய நடிகர் கொஞ்சம் கூட அலட்டிகொள்ளாமல் நடித்து கொடுப்பது அனைவருக்கும் வியப்பாக இருக்கிறது.

மேலும் விஜய் பெப்சி உறுப்பினர்களுக்காக சென்னையில் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என கூறியதை பலரும் பாராட்டி வருகின்றனர். ஒரு நடிகன் கிடைப்பதே சில மணிநேரம் தான் அவருக்கு ஏகப்பட்ட வேலையில் இருக்கும் அதனால் அவர் நேரத்தை ஒதுக்க முடியாமல் நடந்து கொள்வதை ஏன் தவறாக பேச வேண்டும் என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Next Story

- Advertisement -