வியாழக்கிழமை, பிப்ரவரி 20, 2025

அன்று அஜித்துக்கு நடந்ததுதான் இன்று சிவகார்த்திகேயனுக்கும் நடக்கிறது.. சிக்கலில் மாட்டி சின்னாபின்னமான தல!

இன்று முன்னணி நடிகராக இருந்தாலும் ஒரு காலத்தில் தயாரிப்பாளர்களால் நொந்து போன நடிகர்களின் சம்பவங்கள் நிறைய இருக்கிறது. அதிலும் குறிப்பாக தல அஜித்தை நம்ப வைத்து ஏமாற்றிய தயாரிப்பாளரை இப்போதுவரை வெறுத்து ஒதுக்கி வருகிறார்.

சினிமாவைப் பொருத்தவரை ஒரு சில நடிகர்கள் தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்தால் அந்த படத்தின் தயாரிப்பாளர்கள் நடிகர்களிடம் நட்புறவு வைத்துக் கொண்டு தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தம் செய்து கொள்வார்கள்.

அப்படி ஒரு காலத்தில் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி என்பவரின் ஆஸ்தான நடிகராக வலம் வந்தவர் தல அஜித். தொடர்ந்து சக்கரவர்த்தி தயாரிக்கும் படங்களில் மட்டுமே நடித்து வந்தார். இதில் ஒரு சில படங்கள் வெற்றி பெற்றாலும் பல படங்கள் தோல்வியை சந்தித்தன.

இதனால் பல்வேறு கடன் பிரச்சனைகளில் சிக்கினார் சக்கரவர்த்தி. அப்போது படத்தால் நஷ்டமானவர்கள் அஜித் தான் வேறு ஒருவரின் பெயரில் தயாரிப்பு நிறுவனம் வைத்துள்ளார் என கூறி அவரிடம் நஷ்ட ஈடு கேட்டு சென்ற போது படத்தின் உண்மையான தயாரிப்பாளரான சக்கரவர்த்தி அதை கண்டு கொள்ளவில்லையாம். இதனால் அஜித் பல லட்சம் கொடுத்து அந்த பிரச்சனையை சரி கட்டினாராம்.

அதன்பிறகு சக்கரவர்த்திக்கும் அஜித்துக்கும் இருந்த நட்பு முறிந்தது. அதே தான் தற்போது சிவகார்த்திகேயன் விஷயத்திலும் நடைபெற்று வருகிறது. 24am ஸ்டுடியோஸ் ஆர் டி ராஜா தயாரிப்பில் தொடர்ந்து சில படங்களில் நடித்த சிவகார்த்திகேயன் ஒரு சில படங்கள் தோல்வியை சந்தித்ததால் சிவகார்த்திகேயனின் சொந்த நிறுவனம் தான் அது என பேச்சுகள் எழுந்தன. அதைத் தொடர்ந்து அந்த நிறுவனம் பட்ட கடனுக்கு இன்றுவரை சிவகார்த்திகேயன் தான் பதில் சொல்லி வருகிறார்.

ajith-sivakarthikeyan-cinemapettai
ajith-sivakarthikeyan-cinemapettai

இது சம்பந்தமாக ஒரு முறை தல அஜித் சிவகார்த்திகேயனின் கூப்பிட்டு பல விஷயங்களை ஷேர் செய்து கொண்டதாகவும் அஜித் வட்டாரங்களிலிருந்து செய்திகள் வெளிவந்தன. சிவகார்த்திகேயனுக்கு இந்த பிரச்சனையிலிருந்து எப்படி மீண்டு வர வேண்டும் என்ற ஐடியாவையும் அஜித் கொடுத்துள்ளாராம்.

Trending News