விவேகம் ஓவர்! அஜீத் சிவா திடீர் சந்திப்பு! பின்னணி என்ன?

சோசியல் மீடியாக்களில் விவேகம் படத்தை பற்றின விமர்சனமும். பத்திரிகையாளர்களில் சிலர், பொய் முகம் கொண்டு கொஞ்சம் அதிகமாக மோசமாக பேசிய பேச்சும் அரங்கேறியது. இரண்டுக்கும் நடுவே இருக்கும் யதார்த்தம் புரிந்தவராச்சே அஜீத்? சில தினங்களுக்கு முன் ‘விவேகம்’ இயக்குனர் சிவாவை வீட்டுக்கு வரச்சொல்லியிருந்தாராம். அப்போது பேசப்பட்டதுதான் அஜீத்தின் நற்குணத்திற்கு ஒரு சான்று.

“இந்தப்படம் குறித்த விமர்சனங்களும் ஏச்சு பேச்சுகளும் உங்களை காயப்படுத்தியிருக்கும். எதற்கும் கவலைப்படாதீங்க. அந்த தாக்குதல் எதுவும் உங்களை குறி வைத்து நடந்தது இல்ல. என்னை குறி வச்சு நடந்தது. அது எனக்கு நல்லா தெரியும். அடுத்த படத்திற்கான கதையை பேசுங்க. திரும்பவும் நாமதான் சேர்ந்து படம் பண்றோம்” என்றாராம்.

Comments

comments