ajith

சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வெளிவந்த படம் விவேகம் இப்படம் கலவையான விமர்சனங்களையும் தாண்டி வசூலில் வெற்றி பெற்றது இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான ‘வேதாளம்’ திரைப்படத்திற்கு இசையமைத்ததன் மூலம் ‘தல’ அஜித்தின் நட்பு வட்டத்துக்குள் நுழைந்தவர் பிரபல இளம் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர்.

அவர் இசையில் உருவான ‘ஆலுமா டோலுமா’ பாடல், இப்போதும் இளைஞர்கள் மற்றும் குழந்தைகளின் விருப்ப பாடலாக உள்ளது. அதன் பின் இரண்டாவது முறையாக ‘விவேகம்’ திரைப்படத்திலும் இக்கூட்டணி இணைந்த்தார்கள், தற்போது மூன்றாவது முறையாகவும் இணைய உள்ளனர் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிகம் படித்தவை:  இப்படி தூண்டி விடுறதே இவங்கதான்..! "விவேகம்" "மெர்சல்" போட்டா போட்டி!

‘தல’ அஜித்தின் அடுத்த திரைப்படத்தை இயக்குவதும் இயக்குநர் சிறுத்தை சிவா தான் என தகவல்கள் வெளிவந்துக்கொண்டு இருக்கிறது. தற்போது தோள்பட்டை அறுவை சிகிச்சைக்குப் பிறகு சென்னையில் ஓய்வில் இருக்கும் ‘தல’ அஜித், சில மாதங்களுக்கு கட்டாய ஓய்வில் இருந்தது வருகிறார்.

அதிகம் படித்தவை:  விசுவாசம் படத்தில் இணைந்த மேலும் ஒரு முன்னணி நடிகர்.! தெறிக்க விடலாமா

அதற்குள் அடுத்த படத்தின் கதையைத் தயார் செய்ய அஜித் சொல்லி உள்ளதாகவும் . அந்த திரைப்படத்திற்கும் அனிருத் தான் இசையமைக்கப் போகிறார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.