தனுஷ் படத்தில் நடிக்க பல நடிகைகள் வெயிட்டிங். இந்நிலையில் இவர் அடுத்து துரை செந்தில் இயக்கத்தில் கொடி படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் இவருக்கு ஜோடியாக த்ரிஷா, ஷாம்லி நடிக்கவிருந்தனர். தற்போது வந்த தகவலின்படி இதில் த்ரிஷாவிற்கு தான் அதிக முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரமாம்.

அதிகம் படித்தவை:  காமிக்ஸ் ஸ்டைலில் புதிய போஸ்டருடன் முக்கிய தகவலை வெளியிட்ட வட சென்னை தனுஷ்.

ஷாம்லிக்கு வெறும் இரண்டு பாடல்கள் மற்றும் ஒரு சில காட்சிகள் தான் இருப்பதால், தனக்கு கதை பிடிக்கவில்லை என்று அவர் இந்த படத்திலிருந்து விலகியதாக ஒரு செய்தி வைரலாக பரவி வருகின்றது. படக்குழுவும் இதுக்குறித்து ஏதும் கூறாமல் மௌனம் சாதித்து வருகின்றது. ஷாம்லி கேரக்டரில் பிரேமம் மற்றும் காதலும் கடந்து போகும் ஆகிய படங்களில் நடித்துள்ள மடோனா செபாஸ்டின் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.