இத்தனைநாள் நம் வீட்டில், அலுவலகத்தில், கல்லூரியில், டீக்கடையில், பொது இடத்தில் பேசுபொருளாக இருந்த நிகழ்ச்சி பிக்பாஸ். முதன்முதலாக இப்படி ஒரு நிகழ்ச்சி அறிவிக்கப்பட்டபோது சிலருக்கு என்னவென்றே புரியவில்லை.

சிலருக்கு இதெல்லாம் தமிழுக்கு செட் ஆகுமா? என்ற குழப்பம். சிலருக்கு நாட்டில் இத்தனை பிரச்னை இருக்கும்போது இதெல்லாம் தேவையா? என்கிற கோபம், ஒருத்தரோட அந்தரங்கத்தை படம் பிடித்துக் காட்டுவது சரியா? என்ற ரௌத்திரம், இதெல்லாம் நிஜமா, ஸ்க்ரிப்டா? என்ற சந்தேகம் என எல்லா திசைகளிலிருந்தும் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டது.

தொடக்கத்தில் ‘கமல் டிவி ஷோ பண்ணப்போறாராமே? இதெல்லாம் அவருக்கு தேவையா?’ என்று கேட்டவர்கள், பிறகு கமல் அல்லாமல் வேறு யாராலும் இதைச் சிறப்பாக செய்யமுடியாது என்று ஒப்புக்கொண்டார்கள்.

‘பிரபலங்கள்னு சொன்னீங்க.. இவங்கதான் பிரபலங்களா?’ என்று நகைத்தவர்களுக்கு இன்று எல்லார் முகங்கள் மட்டுமல்லாமல் குணங்களும் பரிச்சயம். இவர் நல்லவர், இவர் கெட்டவர்.

இவர் பொய் சொல்கிறார், இவர் நேர்மையாக இருக்கிறார். இவரை எனக்குப் பிடிக்கும், இவரை எனக்குப் பிடிக்காது என்று ஒவ்வொருவர் பற்றியும் நம்மிடம் ஒரு அபிப்ராயம் கொண்டிருந்தோம்.

நமது அலுவலகத்தை பிக்பாஸூடன் ஒப்பிட்டோம். தமிழக அரசியலை பிக்பாஸூடன் ஒப்பிட்டோம். எம்.எல்.ஏக்களை ரிசார்ட்டில் அடைத்துவைத்ததை பிக்பாஸூடன் ஒப்பிட்டோம்.

நமக்கெல்லாம் ஒருபடி மேலே போய் ஒரு அரசியல்வாதி தனது ஓட்டுகளை ஓவியாவின் ஓட்டுகளுடன் ஒப்பிட்டார். இது தேவையா? இவ்வளவு பில்டப் தேவையா? என்பதையெல்லாம் தாண்டி நல்லதோ கெட்டதோ இன்று தவிர்க்க முடியாததாகி இருக்கிறது பிக்பாஸ்.biggboss முதல் சீசன் முடிந்து விட்டது.ajith vivegam

அஜித் என்றால் உழைப்பு, அஜித் என்றால் துணிவு என அர்த்தம் சொல்கிறார்கள் ரசிகர்கள். அதை ஒப்புக்கொள்ளும்விதமாக இருக்கிறது அஜித்தின் வாழ்க்கையும்.

அஜித்தின் ரசிகர்கள் பலம் நாம் அனைவரும் அறிந்ததே. அவருக்கு திரையுலகத்திலும் பலரும் ரசிகர்கள் தான், அப்படித்தான் சமீபத்தில் ஒருவர் அஜித் குறித்து ஒரு ருசிகர தகவல் ஒன்றை பேசியுள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் கடைசிய வரை நேர்மையாக இருந்த போட்டியாளர் கணேஷ் வெங்கட்ராம் தான், இவரை பலருக்கும் பிடிக்கும்.பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த பிறகு இவர் பல பேட்டிகளை கொடுத்து வருகின்றார், அதில் ஒரு பேட்டியில் இவரிடம் ‘அடுத்த பிக்பாஸ் தொகுப்பாளர் யார் வரவேண்டும்?’ என்று கேட்டுள்ளனர்.

அதற்கு அவர் ‘அஜித் சார் வரவேண்டும், அவர் மிகவும் நேர்மையானவர், அவர் தொகுத்து வழங்கினால் தான் பொருத்தமாக இருக்கும்’ என்று கூறியுள்ளார்.