அஜித் சாரை நீங்கள் எப்படி அப்படி சொல்லலாம்,நடிகர் நட்டி ஆவேசம்.

ப்ளூ சட்டை மாறனுக்கு எதிராக நடிகர் நட்டியும் குரல் கொடுத்துள்ளார்.
விவேகம் படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் வெளியிட்ட விமர்சனம் பலரையும் கோபம் அடைய வைத்துள்ளது.

அந்த விமர்சனத்தை இயக்குனர் விஜய் மில்டன், நடிகர் ராகவா லாரன்ஸ் ஆகியோர் கண்டிதுள்ளனர்.இந்நிலையில் நடிகர் நட்டியும் அது குறித்து ட்வீட்டியுள்ளார். அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
அஜீத் சார் பற்றி ஒருவர் எப்படி அது போன்று பேசலாம்..இதை கண்டிக்கிறோம்..நீங்கள் படத்தை விமர்சிக்கலாம் ஆனால் ஒரு மரியாதைக்குரிய நபர் மற்றும் நடிகர் பற்றி அவதூறாக பேசக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.vivegam

மாறன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று திரையுலக பிரபலங்கள் தெரிவித்து வருகிறார்கள்.இதனால் மாறன் கெதி அதோ கெதிதான்.மாறனை காப்பாற்ற யாரும் வரமாட்டாங்க போல.

Comments

comments

More Cinema News: