புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

ஹீராவுக்கு நோ, ஆனால் ஷாலினிக்கு எஸ் சொன்ன தல சீக்ரெட்.. அஜித்துக்கு அடித்த அந்த காதல் மணி!

தல அஜித்துக்கு தமிழ் சினிமாவில் சில காதல் வரலாறுகள் உண்டு. தல அஜித் ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான். ஆனால் அதற்கு முன்பே இரண்டு நடிகைகளை காதலித்துள்ளார்.

அஜித்தின் ஆரம்ப காலகட்டங்களில் அவருக்கு மூன்று நடிகைகள் மீது காதல் வந்துவிட்டது. முதல் காதல் எப்போதுமே எல்லோருக்கும் ஸ்பெஷல் தான். அதைப்போல் தான் தல அஜித்க்கும் ஹீரா என்ற நடிகைக்கும் இடைப்பட்ட காதல்.

இருவரும் மிகத் தீவிரமாக காதலித்து வந்தனர். ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டனர். ஆனால் ஹீரா குடும்பத்தாருக்கு தன்னுடைய மகளை வைத்து முடிந்தவரை கல்லா கட்ட வேண்டும் என்ற எண்ணம் இருந்ததாக கூறுகின்றனர்.

அதன் காரணமாகவே அஜித் மற்றும் ஹீரா ஆகிய இருவருக்கும் இடையில் சின்ன சின்ன பிரச்சினைகளை கிளப்பி விட்டு பின்னர் ஈகோவால் அந்த காதல் முறிவு பெற்றதாம். அதன் பிறகு அஜீத் வான்மதி படத்தில் நடித்தபோது சுவாதி என்ற நடிகையின் மீது காதல் வயப்பட்டு, நேரடியாக அவரிடம் தாயாரிடம் பொண்ணு கேட்டு சென்றார். ஆனால் மிகப்பெரிய நடிகையான பிறகு தான் சுவாதியை திருமணம் செய்து கொடுப்பேன் என கூறி அஜித்தை திருப்பி அனுப்பிவிட்டாராம்.

ஆனால் இந்த இருவரையும் விட தல அஜித்துக்கு நம்பிக்கையான பெண்ணாக இருந்தது ஷாலினி தானாம். ஷாலினி மற்றும் அஜித் இணைந்து நடித்த படங்களில் அஜீத் மீது ஷாலினிக்கு காட்டிய அக்கறை மற்ற நடிகைகளின் மீதான காதலை மறக்கச் செய்துவிட்டதாம்.

ajith-shalini-cinemapettai
ajith-shalini-cinemapettai

இப்படி ஒரு பெண் தான் தனக்கு தேவை என அஜித் தன்னுடைய ஆசையை கூற அதற்கு ஷாலினியும் மறுப்பு தெரிவிக்காமல் இருக்க உடனே அரங்கேறியது காதல் திருமணம். இருவரும் நல்ல புரிதலுடன் நீண்ட காலமாக கணவன் மனைவியாக சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Trending News