நண்பர்களை விட மோசமாய் பேசும் ஷாலினி.. சந்தானத்திடம் உண்மையை போட்டுடைத்த அஜித்

அஜித் தற்போது 51 வயதை எட்டி உள்ளார். சினிமா பின்புலம் எதுவும் இல்லாமல் தன்னுடைய கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியால் மட்டுமே தமிழ் சினிமாவில் ஒரு நிரந்தர இடத்தை பிடித்தவர் அஜித். அதனால்தான் என்னவோ இவர் உழைப்பாளர் தினமான மே 1 இந்த மண்ணுலகில் பிரவேசித்து உள்ளார்.

இந்நிலையில் அஜித் எந்த சமூக வலைத்தளத்திலும் இல்லை. இவர் தன்னுடைய சொந்த வாழ்க்கையை மிகவும் ரகசியமாக வைத்துக் கொள்பவர். மேலும், தன்னுடைய படத்தின் புரமோஷனுக்காக கூட தற்போது ஊடகங்களுக்கு பேட்டி கொடுப்பதை நிறுத்திவிட்டார். ஆனாலும் தற்போது வரை அவரது படங்கள் வசூல் சாதனை படைத்து வருகிறது.

ஆனால் ஆரம்பத்தில் அஜித் தனது படத்தின் பிரமோஷனுக்காக தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்துவருவார். அவ்வாறு பில்லா படத்தின் பிரமோஷனுக்காக சந்தானம், அஜித்தை பேட்டி எடுத்திருந்தார். அதில் தன்னுடைய சினிமா வாழ்க்கையை பற்றி பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார் அஜித். அதுமட்டுமின்றி ஷாலினிக்காக அஜித் புகைப்பிடிக்கும் பழக்கத்தையும் விட்டுவிட்டாராம்.

அதில் தன்னுடைய மோசமான விமர்சகர் என்றால் அது தன் மனைவி ஷாலினி என கூறியுள்ளார். அதாவது தன்னுடைய படங்களை பார்த்த நண்பர்கள் படம் பிடிக்கவில்லை என்றாலும் ராஜதந்திரமாக பதில் கூறுவார்கள். ஆனால் ஷாலினி எதையும் நேர்மையாக விமர்சிக்க கூடியவர்.

தனக்கு பிடிக்கவில்லை என்றால் நேரடியாகவே கூறிவிடுவார். மேலும் என்னுடைய வளர்ச்சிக்கு ஷாலினி ஒரு முக்கிய காரணம் என அஜித் கூறியிருந்தார். மேலும் அஜித், ஷாலினி இருவரின் காதல் மலர்ந்த தருணத்தையும் பகிர்ந்துகொண்டார் அஜித். அமர்க்களம் படத்தில் முதலில் நடிக்க ஷாலினி சம்மதம் தெரிவிக்க வில்லையாம்.

உடனே தயாரிப்பாளர்கள் அஜித்தை வைத்து பேச சொன்னார்களாம். ஆனால் அதற்கும் ஷாலினி, தான் படிப்பில் கவனம் செலுத்த உள்ளதாக கூறி மறுத்து விட்டாராம். அதன் பின்பு தயாரிப்பாளர்கள் வற்புறுத்தியதால் அமர்க்களம் படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார் ஷாலினி. மேலும் முதல் நாள் சூட்டிங்கின்போது தற்செயலாக அஜித், ஷாலினியின் மணிக்கட்டை வெட்டியுள்ளார்.

ஆனால் ஷாலினி தொடர்ந்து படப்பிடிப்பில் நடித்து வந்துள்ளார். ஆனால் சிறுது நேரம் கழித்து தான் கையில் ரத்தம் கசிந்து கொண்டிருப்பது அனைவருக்கும் தெரிந்தது. அப்போதுதான் எங்கள் காதல் அங்கே தொடங்கியது என அஜித் அந்த பேட்டியில் கூறியிருந்தார். கிட்டத்தட்ட 22 வருடங்கள் கடந்தும் அஜித், ஷாலினி காதல் இன்னும் அதிகமாகிக் கொண்டேதான் போகிறது.

Next Story

- Advertisement -