Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

யாருக்கும் தெரியாத அஜித் – ஷாலினி காதலின் ரகசியத்தை வெளியிட்ட ஷாமிலி

அஜித் மற்றும் ஷாலினி இடையே உள்ள காதல் குறித்து ஷாலினியின் தங்கை ஷாமிலி முதல்முறையாக மனம் திறந்து இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் யாருடைய உதவியும் இல்லாமல் அறிமுகமானவர் நடிகர் அஜித். 1992 இல் பிரேம புத்தகம் என்ற தெலுங்குத் திரைப்படத்தில் அறிமுகமானார். இந்தப் படத்தில் இவருக்கு சிறந்த புதுமுகத்திற்கான விருது கிடைத்தது. இதன் பின்னரே அமராவதி என்ற தமிழ்த் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால், தமிழ் சினிமாவில் சரியான வாய்ப்புகள் அமையவில்லை. தமிழில் இவரின் முதல் வெற்றி படமாக அமைந்தது ஆசை படம் தான். தொடர்ந்து, அஜித் மோட்டார் பந்தயங்களில் அதிக ஆர்வம் காட்டியது, திரைப்படங்களில் நடிப்பதற்கு தடையாக அமைந்தது. இதனால் சில திரைப்படங்களில் மட்டுமே நடித்தார்.

நிலையில்லாமல் சென்று கொண்டிருந்த இவர் திரை வாழ்வில், 1999ம் ஆண்டு சரண் இயக்கத்தில் அமர்க்களம் படத்தின் மூலம் ஒரு மாற்றம் ஏற்பட்டது. அப்படத்தில், தன் சக நடிகையான ஷாலினியை விரும்பினார். சொற்ப காலம் காதலித்த பின்னர், இரு வீட்டார் சம்மத்துடன் 2000ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். நடிப்புத் துறையில் அது அஜித்துக்கு சரியான வளர்ச்சி இல்லாத காலம் என்றே சொல்லலாம். ஷாலினியுடனான திருமணத்திற்கு பிறகு, ஒவ்வொரு அடியாக முன்னேறினார். எந்த விஷயத்திலும் பாசிடிவ்வாக கையாளும் ஷாலினி தான் அஜித்தின் தற்போதைய மாஸ் வளர்ச்சிக்கு காரணம் என்று கூறப்படுகிறது. யோசிக்காமல் பேசி விடும் அஜித்தை, இன்று பேசவே யோசிக்க வைத்தது ஷாலினி தான் என்கிறது திரையுலக பட்சிகள். அனேஷ்கா, ஆத்விக் என்ற இரு பிள்ளைகள் இருந்தும், இன்னும் தங்கள் காதலை அப்படியே வளர்த்து வருகிறார்கள். இருவரின் காதல் குறித்த சில விஷயங்கள் கூட தல ரசிகர்களுக்கு அதிகம் தெரிந்தது இல்லை.

இந்நிலையில், பலருக்கும் தெரியாத அஜித் – ஷாலினி காதல் குறித்து தங்கை ஷாம்லி மனம் திறந்து இருக்கிறார். இருவரும் தங்கள் காதலை அவர்களுக்குள்ளே தான் பகிர்ந்து கொண்டனர். யார் உதவியையும் எதிர்பார்க்கவில்லை. அக்கா காதலில் இருந்த போது, அஜித் தரும் பூக்களை யாருக்கும் தெரியாமல் நான் தான் அவரிடம் கொடுத்து வந்தேன். அதுமட்டுமல்லாது, எப்போதும் தன்னுடைய மனைவிக்கு சுதந்திரம் கொடுப்பதையே அஜித் விரும்புவார். இது இவர்கள் வாழ்வில் ஒரு அழகான விஷயம் எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top