Connect with us

Cinemapettai

தல அஜித்தின் லேட்டஸ்ட் போட்டோ இதோ.. பிறந்தநாள் ஸ்பெஷல்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தல அஜித்தின் லேட்டஸ்ட் போட்டோ இதோ.. பிறந்தநாள் ஸ்பெஷல்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் அஜித் குமார். சினிமா என்பது பொழுதுபோக்கு சம்பந்தப்பட்டது, அது பெர்சனல் வாழக்கையை பாதிக்கக்கூடாது என்ற காரணத்தினால் தனது ரசிகர் மன்றத்தை கலைத்தவர்.

நடிப்பு என்பது மட்டுமன்றி பைக், கார் ரேஸிங், ஏரோ மாடெல்லிங், துப்பாக்கி பயிற்சி என நேரத்தை செலவழிப்பார். இவர் நடிப்பில் வலிமை படத்திற்காக ரசிகர்கள் வைட்டிங்.

நேற்று தல அஜித்தின் 50 வது பிறந்தநாள். வலிமை அப்டேட் கிடையாது என கொராணாவை காரணம் காட்டியது தயாரிப்பு தரப்பு, இது நாம் அறிந்த விஷயமே. எனினும் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் விதவிதமான போஸ்டர்களை தெறிக்க விட்டு கொண்டாடினர்.

அஜித் ஒவ்வொரு பிறந்தநாளின் போது தனது வீட்டில் குடும்பத்தினருடன் எளிமையாக கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டிருப்பார். அந்த வகையில் நேற்று 50வது பிறந்தநாளையும் அவர் தனது வீட்டிலேயே மனைவி மற்றும் குழந்தைகளுடன் எளிமையாக கொண்டாடியுள்ளார் என்ற தகவலுடன் இந்த போட்டோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

ajith shalini

எனினும் இது நேற்று எடுக்கப்பட்டது என்பதற்கு எந்த வித ஆதாரமும் இல்லை என்பதே உண்மை.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top