Ajith : அஜித் என்றால் தமிழ் சினிமாவை காட்டிலும் மற்ற மொழிகளிலும் நல்ல பரிச்சயமானவர் தான். அவர் எங்கு சென்றாலும் ரசிகர்கள் பின் தொடர்ந்து போட்டோ எடுத்து சமீபகாலமாக சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார்கள். அந்த புகைப்படங்களும் இணையத்தில் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது.
இப்போது அஜித்தின் கைவசம் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்கள் இருக்கிறது. மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி படம் இந்த தீபாவளி பண்டிகைக்கும், குட் பேட் அக்லி 2025 பொங்கல் பண்டிகைக்கும் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் டாடா படத்தின் புகழ் கவின் மற்றும் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் ஆகியோர் அஜித்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இதை கவின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்த சூழலில் பிரபல இசைமைப்பாளரிடம் அஜித் மன்னிப்பு கேட்டுள்ளாராம்.
இசையமைப்பாளரிடம் சாரி சொன்ன அஜித்
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் அஜித்தை பற்றி பேசி இருந்தார். விமான நிலையத்திற்கு சென்ற போது எதர்ச்சியாக அஜித்தை சந்திக்கும் வாய்ப்பு சந்தோஷ் நாராயணனுக்கு கிடைத்துள்ளது. அப்போது அஜித் ஐந்து நிமிடம் சந்தோஷ் நாராயணன் இடம் பேசினாராம்.
நான் மியூசிக் செய்கிறேன் என்று சொன்னவுடன் நீங்க ரொம்ப நல்லா வருவீங்க என்று அஜித் கூறி இருக்கிறார். அதன் பிறகு சந்தோஷ் நாராயணனின் மனைவி அருகில் இருந்த நிலையில் அவர் அஜித்திடம் இவர் என்னென்ன படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பதை கூறினாராம்.
உடனே ரொம்ப சாரிங்க என்று சந்தோஷ் நாராயணனிடம் அஜித் மன்னிப்பு கேட்டுள்ளார். இவ்வளவு பெரிய நடிகர் என்னிடம் மதித்து பேசினது மிகவும் வியப்பாக இருந்ததாக சந்தோஷ் நாராயணன் கூறியுள்ளார். இந்த பேட்டி அஜித் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
விடாமுயற்சிக்கு கிடைக்குமா விடிவுகாலம்
- விடாமுயற்சியில் தொடர்ந்து ஏற்படும் குழப்பம்
- அதிக வசூலை அல்ல டார்கெட் பண்ணிய விடாமுயற்சி
- அஜித்தின் விடாமுயற்சியை பங்கம் செய்யும் நெட்டிசன்ஸ்