இறைவி படம் இன்று திரைக்கு வந்துள்ளது,படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய எஸ்.ஜே.சூர்யா,அஜித் பற்றி பேசினார்,

அவர் கூறியதாவது …..

அஜித் சார் எப்பவுமே பழசை மறக்காதவர். அதற்கு உதாரணமாக ஒன்னும் சொல்லனும். அப்போ நான் ஆசை படத்துல உதவி இயக்குநராக வசந்த் சாரிடம் வேலை செய்து கொண்டிருந்தேன். அஜித் சாருக்கு அந்த படத்துல 75 ஆயிரம் சம்பளம் கொடுத்தாங்க. அந்த படத்துல வேலை செய்யும் போது அஜித் என்னை கவனித்திருப்பாருன்னு நான் நினைச்சு கூட பாக்கல.

அதுக்கப்புறம் உல்லாசம் படத்துல மீண்டும என்னை உதவி இயக்குநராக பார்த்தவர். அங்கிருந்தவர்களிடம் கேட்டுள்ளார். ஏன் இன்னும் சூர்யா படம் இயக்காம இருக்காருன்னு. அப்புறம் என்னை அவர் கூப்பிட்டு நல்ல கதையாக இருந்தா எடுத்துட்டு வாங்க நம்ம சேர்ந்து பன்னலாம்னு சொன்னாரு. அப்போ உருவானதுதான் வாலி.