Tamil Cinema News | சினிமா செய்திகள்
இந்த படம் வரட்டும் சார்! அடுத்து ரஜினிக்கு அப்புறம் நான்தான்.. பிரபல தயாரிப்பாளரிடம் அன்றே சொன்ன அஜித்
பிரபல தயாரிப்பாளர் பி எல் தேனப்பன் கமலஹாசன் பிரபுதேவா நடிப்பில் உருவான காதலா காதலா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு தயாரிப்பாளராக அறிமுகமானார். அன்றிலிருந்து பல வெற்றி படங்களை தயாரித்து வந்த தேனப்பன் கடைசியாக பேரன்பு என்ற படத்தை தயாரித்து இருந்தார்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தல அஜித் பற்றி தேனப்பன் கூறியது அவரது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அவர் கூறியதாவது, தொடரும் படத்தின் போதுதான் தனக்கும் அஜித்துக்கும் நட்பு ஏற்பட்டதாகவும், அதன் பிறகு ஷாலினி அஜீத் ஆகிய இருவருடனும் சேர்ந்து செட்டில் விளையாடுவோம் என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும் தல அஜித், வில்லன் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போது இந்த படத்திற்கு பிறகு நான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு அடுத்தபடியாக வந்துவிடுவேன் என்று தன்னிடம் கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அன்று அவர் கூறியபடி இன்று தமிழ் சினிமாவின் வசூல் நாயகனாக வளர்ந்துள்ளார் என்றும், அவருடைய தன்னம்பிக்கைக்கு இதுவே காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் பொங்கல் வெளியீடாக வெளிவந்த விஸ்வாசம், பேட்ட ஆகிய இரண்டு சம அளவு வெற்றி பெற்றது. தற்போது தல அஜித் எச் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
