Tamil Cinema News | சினிமா செய்திகள்
வேற வழியில்ல… சம்மதித்தார் அஜீத்
ஒரே ஒரு ஷாட்தான் சென்னையில். மற்றதெல்லாம் வெளிநாட்டில்தான் என்கிற முடிவோடுதான் அஜீத் 57 படம் துவங்கப்பட்டது. தடபுடலாக பல்கேரியா கிளம்பினார்கள். அங்கு அஜீத்தை லாங் ஷாட்டில் போட்டோ எடுத்து அதை வைரலாக்கினார்கள் அவரது ரசிகர்கள். இந்த நிமிஷம் வரைக்கும் அந்தப்படத்தின் அதிகாரபூர்வ புகைப்படங்கள் வராவிட்டாலும், இணையத்தில் தேடினால் ஏகப்பட்ட ஸ்டைலில் கிடைக்கிறார் அஜீத்.
வெளிநாட்டுக்குப் போனாலும் ரகசியம் காக்க முடியலையே என்று படக்குழு கவலைப்பட்ட நேரத்தில்தான் விதி “சென்னையிலேயே எடுங்க” என்று உத்தரவிட்டது டைரக்டர் சிவாவுக்கு. ஏன்? பல்கேரியா ஷெட்யூலில் பிய்த்துக் கொண்டு செலவாகிறதாம். போட்ட பட்ஜெட் ஒன்று. முடியும்போது கிடைக்கிற கணக்கு வழக்கு வேறொன்று என்கிற அளவுக்கு செலவு பாக்கெட்டை அறுத்து வைக்கிறதாம். இது போதாதென்று ஏற்கனவே சத்யஜோதி நிறுவனத்தில் வெளியான ‘தொடரி’ படம் பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியதால் “பல்கேரியாவில் நடக்கும் இன்டீரியர் காட்சிகளை இங்கு சென்னையிலேயே செட் போட்டு எடுங்கள்” என்று கூறிவிட்டாராம் சத்யஜோதி தியாகராஜன்.
இருந்தாலும், இன்னும் சில முக்கியமான காட்சிகளை படமாக்க மறுபடியும் பல்கேரியா கிளம்புவார்களாம். ஆனால் அது இப்போது இல்லை.
முதலில் அப்செட் ஆன அஜீத், இப்போது சென்னையிலேயே படப்பிடிப்பு நடத்த சம்மதித்துவிட்டார். அவருக்கு ராசியான பின்னி மில்லில் நடக்கிறது ஷுட்டிங். செக்யூரிடி டைட் என்றாலும், அஜீத்தின் சால்ட் அண் பெப்பர் தலை தெரியாதா என்று வழியில் காத்துக்கிடக்கிறார்கள் ரசிகர்கள்.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
