புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

அப்பாடா ஒரு வழியா வினோத்துக்கு டாட்டா சொன்ன அஜித்.. இணையப் போகும் சூப்பர் ஹிட் டைரக்டர்

‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்திற்கு பிறகு அஜித்தும் இயக்குனர் வினோத்தும் ‘வலிமை’ திரைப்படத்தில் இணைந்தனர். மேலும் இந்த இந்த திரைப்படத்தை பாலிவுட் இயக்குனர் போனி கபூர் தயாரித்தார். ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் ஓரளவிற்கு ரசிகர்களிடையே நேர்மறை விமர்சனங்கள் பெற்றிருந்தாலும் அது பாலிவுட் திரைப்படமான ‘பிங்க்’ படத்தின் ரீமேக் என்பதால், அஜித்-வினோத்-போனி கபூர் கூட்டணியில் வெளியான வலிமை திரைப்படத்தின் மீது ரசிகர்கள் மிகப்பெரிய நம்பிக்கை வைத்திருந்தனர்.

ஆனால் வலிமை அஜித் ரசிகர்களுக்கு அந்த அளவுக்கு திருப்தியை தரவில்லை, சொல்ல போனால் ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்திற்கு பிறகு அஜித் வேறு எந்த வெற்றி படமும் தரவில்லை. அஜித் ரசிகர்களாலும் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை, இத்தனை எதிர்மறை விமர்சனங்கள் இருந்தும் அஜித் மீண்டும் வினோத்துடன் இணைந்துள்ளார்.

AK 61 என்னும் பெயரிடப்படாத திரைப்படத்தில் பணியாற்றி வருவது அஜித் ரசிகர்களிடையே மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. ஆனால் இம்முறை எந்த தவறும் நடந்து விட கூடாது என வினோத் கதை, திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தி வருகின்றார். அஜித்தும் இந்த படத்திற்காக தனது உடல் எடையை குறைத்துள்ளார்.

இந்த திரைப்படம் ஒரு உண்மை சம்பவத்தை தழுவியது எனவும் இதன் பர்ஸ்ட் லுக் ஆகஸ்ட் 13 ஆம் தேதி வெளியாகும் எனவும் தகவல்கள் வந்துள்ளன. அஜித் தனது 62வது திரைப்படத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.

விக்னேஷ் சிவனுடனான கூட்டணி என்பதால் மீண்டும் ஒரு ஜாலியான அஜித்தை திரையில் காணலாம். இந்நிலையில் இயக்குனர் புஷ்கர் காயத்ரி அஜித்திற்காக கதை எழுதி வைத்துள்ளதாகவும், இருவரும் இணைய வாய்ப்புள்ளது, அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

யார் இந்த புஷ்கர் காயத்ரி? இயக்குனர் புஷ்கர் காயத்ரி நடிகர் மாதவன்-விஜய்சேதுபதி கூட்டணியில் ‘விக்ரம் வேதா’ என்னும் மிகப்பெரிய ஹிட் படத்தை கொடுத்தவர். மேலும் தமிழில் ‘ஓரம் போ’ ‘வா குவாட்டர் கட்டிங்’ ‘ஏலே’ திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

- Advertisement -

Trending News