வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

வலிமை ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸுக்கு அஜித் போட்ட முட்டுக்கட்டை.. மறுபடியும் முதல்ல இருந்தா தல?

தல அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மே 1ம் தேதி வெளியாக உள்ளது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான். ஆனால் அதில் அஜித் ஒரு ட்விஸ்ட் வைத்து விட்டாராம்.

நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றிக்கு பிறகு அஜித் வினோத் கூட்டணியில் இரண்டாவது முறையாக வலிமை படம் உருவாகி வருகிறது. இறுதிகட்டத்தை எட்டியுள்ள வலிமை படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

அதற்கு காரணம் ஸ்பெயின் நாட்டில் மீதமுள்ள காட்சிகளை படமாக்க பட வேண்டிய சூழ்நிலை இருப்பதாலும், ஆனால் அங்கு கொரானா அச்சம் காரணமாக தற்போது வரை அனுமதி வழங்காமல் இழுத்தடித்து வருவதாகவும் தல வட்டாரங்களிலிருந்து செய்திகள் வந்துள்ளன.

90 சதவீத படப்பிடிப்புகளை முடித்து வைத்துவிட்டு படத்தின் எடிட்டிங் டப்பிங் என அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு ஒரு சில காட்சிகள் படப்பிடிப்புக்காக மட்டும் வலிமை படக்குழுவினர் வெயிட் செய்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் வருகின்ற மே 1ஆம் தேதி தல அஜித்தின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட போவதாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் சமீபத்தில் அறிவித்திருந்தார்.

ஆனால் தற்போது தல அஜித் மீண்டும் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட வேண்டாமென ஒரு கருத்தை முன்வைத்துள்ளதாக கூறுகின்றனர். தற்போது மீண்டும் கொரானாவின் தாக்கம் அதிகமாக இருப்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறுகின்றனர்.

கடந்த வருடமும் கொரானா உச்சத்தில் இருந்த நிலையில்தான் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட வேண்டாமென தல அஜித் கூறியதாக செய்திகள் வெளிவந்தன. இதனால் ஒரு வருடத்திற்கும் மேலாக காத்துக்கொண்டிருக்கும் தல ரசிகர்கள் இந்த முறையும் அமைதியாக இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அஜித் மனதை மாற்றி படக்குழுவினர் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடுவார்களா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

valimai-fanmade-posters
valimai-fanmade-posters

Trending News