fbpx
Connect with us

மோடி அறிவிப்பு! கவலையே இல்லை அஜீத்? தப்பித்தது 100 கோடி?

ajith-100-crore

News / செய்திகள்

மோடி அறிவிப்பு! கவலையே இல்லை அஜீத்? தப்பித்தது 100 கோடி?

ஒட்டுமொத்த இந்தியாவையும் அப்படி ஒரு உலுக்காக உலுக்கிவிட்டார் பிரதமர் நரேந்திர மோடி. பல கருப்புப்பண முதலைகளுக்கு கண்ணீர். முதலைகளுக்கு வைக்கப்பட்ட பொறியில், எலிகளும் சிக்கிக் கொண்டு அழுவதால், இந்த திட்டம் நல்லதா, கெட்டதா என்கிற குழப்பத்திலேயே தலைவலிக்கு ஆளாகியிருக்கிறது இந்தியா.

தமிழ்சினிமாவில் மட்டுமல்ல, இந்திய சினிமாவே கருப்புப்பணத்தை நம்பிதான் ஓடிக் கொண்டிருக்கிறது. இங்கு வட்டிக்கு பணம் கொடுக்கிற பைனான்சியர்களும் கருப்பு பணத்தைதான் கொடுக்கிறார்கள். வட்டியும் மீட்டர் வட்டி, கந்து வட்டி என்ற முறையில் இருந்தது நம்ம சினிமா பீல்டு.

சரி… மேட்டருக்கு வருவோம். சில மாதங்களுக்கு முன் அஜீத், 100 கோடி ரூபாய் பணத்தை வெள்ளையாகவே இந்தியாவில் இயங்கும் வங்கி ஒன்றில் டெபாசிட் செய்துள்ளதாக தகவல் வந்தது. மாதம் ஒரு கோடி வட்டி வரும். மார்க்கெட்டில் இருந்தாலும் சரி. போனாலும் சரி. இந்த ஒரு கோடி போதும் குடும்பத்திற்கு என்று அவர் இந்த முடிவில் இறங்கியதாக கூறுகிறது வட்டாரம்.

பொதுவாகவே தனது சம்பளம் எல்லாம் ப்யூர் வெள்ளையில் வாங்குகிற வழக்கத்தை பல வருடங்களாக கடை பிடித்து வந்தார் அஜீத். முறையான வருமான வரியையும் செலுத்தி வருகிறார். மோடியின் இந்த அறிவிப்பு, அஜீத்தை பொருத்தவரை எவ்வித நடுக்கத்தையும் ஏற்படுத்தவில்லையாம். ஒரு வேளை முன் கூட்டியே இப்படியெல்லாம் நடக்கும் என்பதை அறிந்துதான் சம்பள விஷயத்தை எல்லாம் இப்படி தீர்மானித்துக் கொண்டார் போல? அவரது ரசிகர்களும் அவரை தொடர்ந்தால்.. வேறன்ன அஜித்தும் ஒரு ரோல் மாடல்தான் ..

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top