Tamil Cinema News | சினிமா செய்திகள்
துக்க வீட்டுக்கு சென்ற அஜித் செய்த நெகிழ வைக்கும் காரியம் – வெளிவராத தகவல்!
தல அஜித்தின் நற்பண்பு எல்லோருக்கும் தெரிந்ததுதான். இவரது முதல் படத்தில் இருந்தே இவருடைய மேனேஜர் இவருடைய நெருங்கிய நண்பர் சுரேஷ் சந்திராதான். இவருடைய மாமனார் அண்மையில் தவறிவிட்டார்.
இதையறிந்த அஜித், உடனடியாக துக்க வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது செல்லும் வழியில் சைக்கிளில் டீ விற்கும் பையனிடம் வழி கேட்டிருக்கிறார். அஜித் வழி கேட்கிறார் என்கிற அதிர்ச்சியில் இருந்து மீண்டு அவனும் வழி சொல்லியிருக்கிறான்.
பின் துக்க வீட்டுக்கு சென்ற அஜித் மறுபடியும் வந்து அந்த பயனை தனது காரிலே அழைத்து சென்று வீட்டில் இருந்த எல்லோருக்கும் டீ கொடுக்கும்படி சொல்லி ஒரு தொகையைக் கொடுத்துள்ளார். பின் வீட்டில் இருந்து ஒருவரை அனுப்பி அந்த பையன் எங்கு செல்ல வேண்டுமோ அங்கு இறக்கிவிட சொல்லியிருக்கிறார்.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
