fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

டூரிஸ்ட் போல வாரணாசியில் சுற்றி வரும் அஜித்! அங்கு பிடித்த உணவு எது தெரியுமா?

Tamil Cinema News | சினிமா செய்திகள்

டூரிஸ்ட் போல வாரணாசியில் சுற்றி வரும் அஜித்! அங்கு பிடித்த உணவு எது தெரியுமா?

கோலிவுட்டில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் தல அஜித். தற்போது வலிமை பட சூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார்.

ஹெச்.வினோத் இயக்குகிறார். போனி கபூர் தயாரிக்கிறார். இப்படம் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் பூஜையுடன் தொடங்கப்பட்டது. இதற்கு பின், எந்தவித அதிகாரப்பூர்வ அப்டேட்டையும் படக்குழு வெளியிடாமல் உள்ளது. இந்தப் படத்தின் ஷூட்டிங் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தள்ளிப்போனது. குறிப்பாக இப்படத்தில் அஜித்தை தவிர யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பதைக்கூட இதுவரை தெரிவிக்கவில்லை.

valimai-cinemapettai

இந்நிலையில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு வாரணாசியில் வேகமாக நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. அங்கு ஷூட் பிரேக் நேரத்தில் அஜித் தொப்பி, மாஸ்க் அணிந்து வெளியே சென்றுவிடுகிறாரம். கோடாவிலே, தஸ்வமேதா போன்ற தெருக்களில் அங்கு சாட் ஸ்னாக்ஸ் மிகவும் பிரபலம். அங்கு தான் அஜித் சாப்பிட்டுள்ளார்.

கடை உரிமையாளர் ஷுபம் கேசரி பிரபல நாளிதழுக்கு அளித்த பேட்டியில், ” அவரை கடையில் பார்த்தது மகிழ்ச்சி. அணைத்து வகையான பனாராசி சாட் ஐட்டம்களையும் சாப்பிட்டார், குறிப்பாக டமாட்டார் சாட் (தக்காளி சாறு மற்றும் வேகவைத்த உருளைக்கிழங்கு அதிகம் இருக்குமாம்) விரும்பி சாப்பிட்டார். அவருக்கு மிகவும் பிடித்து போக மீண்டும் அடுத்த நாளும் வந்தார். மட்டவர்களை போலவே அவரும் வரிசையில் நின்று உணவுகளை ருசித்தார். செய்முறைகளை பற்றி கூட கேட்டறிந்து, அதனை ரெகார்டும் செய்தார்.” என கூறியுள்ளார்.

மேலும் தனது படக்குழுவினர் சிலருடன் சேர்ந்து காசி விஸ்வநாதர் கோவில், அஸ்ஸி கட், சாரநாத் போன்ற இடங்களுக்கும் விசிட் அடித்தாராம் கிடைத்த குறுகிய நேரத்தில்.

Continue Reading
To Top