Tamil Cinema News | சினிமா செய்திகள்
கடலுக்கடியில் அஜித்! அதிரப்போகும் அரங்கம்
அஜித் சிவா இணைந்தால் அதில் ஒரு பிரம்மாண்டமும் இருக்கும் ஒரு ஸ்டைல் இருக்கும். சண்டை காட்சிகளில் கூட ஒரு நல்ல டெக்னீஷியன்ஸ் வைத்துக்கொண்டு நல்ல புதுவிதமான ஒரு சண்டை, நல்ல கிளாஸாக கொடுப்பார். தீம் பாடல் கூட ஒரு சண்டை காட்சி கண்டிப்பாக இருக்கும்.
ஏற்கனவே பழைய படங்களில் ஒரு சில சண்டைக் காட்சிகளில் அஜித் டூப் இல்லாமல் நடித்து காலில் முறிவு ஏற்பட்டது. இருந்தாலும் அவர் தானாகவே ரிஸ்க் எடுத்து ஒரு சில முக்கியமான சண்டைக் காட்சிகளில் நடிப்பார் அதுவரை இயக்குனர் தயாரிப்பாளர் என அனைவரும் சற்று பயத்திலேயே இருந்தனர்.
இப்பொழுது அதே பிரச்சினை மீண்டும் வந்திருக்கிறது இந்த படத்தில் ஒரு கடலுக்கு அடியில் சண்டை போடும் ஒரு காட்சி உள்ளதாம் கடலுக்கடியில் என்றால் மிகவும் ஆழமான நடுக்கடலுக்கு அடியில் அதுக்கு அனுபவமுள்ள ஆட்கள் மட்டுமே செல்லக்கூடும் ஆனால் அஜித்தும் இதற்கு நானே நடித்து பார்க்கிறேன் என்று நடித்துள்ளார். கண்டிப்பாக முன்னெச்சரிக்கையை உதவியோடுதான் நடித்திருப்பார் என்றாலும் இது மாதிரி ரிஸ்க் எல்லாம் தேவையே இல்லாமல் எடுத்து பயத்தை உருவாக்குகிறார். ஆனால் ஒன்று, இந்த சண்டைக் காட்சியில் தியேட்டரில் விசில் சத்தம் பறக்கும் அந்த அளவிற்கு இந்த சண்டைக்காட்சிகள் இருக்குமாம்.
