தல அஜித் தற்போது எச் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். மேலும் பாலிவுட் நடிகை ஹீமா குரேஷி ஒரு முக்கியமான வேடத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
அஜித்தின் வலிமை படம் கடைசியாக ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. பிரமாண்டமான பைக் ஸ்டன்ட் காட்சிகள் போன்றவற்றை அந்த செட்யூல் சமயத்தில் எடுத்து முடித்துள்ளார் இயக்குனர் வினோத்.
படப்பிடிப்பு முடிந்து அனைவரும் இறுதி நாள் மாலையில் வீடு திரும்ப பேக் செய்து கொண்டிருந்தார்களாம். அப்போது தல அஜித், நீங்க பிளைட்ல ஊருக்கு வந்திருக்க, நான் பைக்ல போறேன் என ஷூட்டிங் முடிஞ்சதும் தனது உதவியாளர்களிடம் சொல்லி விட்டு கிளம்பி விட்டாராம்.

காசு கூட இல்லாமல் எப்படி பைக்ல போவீங்க, இருந்த யாரோ ஒருத்தர் கூட வரும் எனசொன்னதுக்கு பெட்ரோல் போடும் அளவு என்னிடம் பணம் உள்ளது எனவும் கூறி விட்டு கிளம்பி விட்டாராம்.
இந்த சம்பவம் நடந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகிய நிலையில் தற்போது தான் இந்த செய்தி கசிந்துள்ளது. தீபாவளியை குறி வைத்து உருவாகி வரும் வலிமை படத்தின் படப்பிடிப்பில் மாறுதல்கள் ஏற்பட்டு உள்ளதால் அதே தேதியில் வெளியாகும் என சந்தேகம் நிலவி வருகிறது.
பைக் விஷயத்தில் யாராலும் தல அஜித்தை கட்டுப்படுத்த முடியாது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தானே.