fbpx
Connect with us

அஜித் ரசிகர்களை அரசியலில் இழுக்கும் தமிழிசை.. உடனே முற்றுபுள்ளி வைத்தார் தல.. அறிவிப்பை உடனே வெளியிட்டார்

ajith viswasam

News | செய்திகள்

அஜித் ரசிகர்களை அரசியலில் இழுக்கும் தமிழிசை.. உடனே முற்றுபுள்ளி வைத்தார் தல.. அறிவிப்பை உடனே வெளியிட்டார்

அஜித் ரசிகர்களை அரசியலில் இழுக்கும் தமிழிசை

அஜித் ரசிகர்கள் 100 பேர் பாஜகவில் சேர்ந்து விட்டனர் என்ற செய்தியை தமிழிசை வெளியிட்டார். இதனால் அஜித் ரசிகர்கள் செம கோவமாக இருந்தனர். இதற்கு தல அஜித் உடனே முற்றுபுள்ளி வைத்தார். மேலும் அவர் கூறியதாவது.

நான் தனிப்பட்ட முறையிலோ அல்லது நான் சார்ந்த திரைப்படங்களில் கூட அரசியல் சாயம் வந்துவிடக் கூடாது என்பதில் மிகவும் தீர்மானமாக உள்ளவன் என்பது அனைவரும் அறிந்ததே. என்னுடைய தொழில் சினிமாவில் நடிப்பது மட்டுமே என்பதை நாம் தெளிவாக புரிந்து இருப்பதே இதற்கு காரணம். சில வருடங்களுக்கு முன்னர் என் ரசிகர் இயக்கங்களை நான் கலைத்ததும் இந்த பின்னணியில்தான். என் மீது என் ரசிகர்கள் மீது என் ரசிகர் இயக்கங்களின் மீது எந்தவிதமான அரசியல் சாயம் வந்துவிடக்கூடாது என்று நான் சிந்தித்ததின் முடிவு  அது.

என்னுடைய இந்த முடிவுக்கு பிறகு கூட சில அரசியல் நிகழ்வுகளுடன் என் பெயரையோ என் ரசிகர்கள் பெயரையோ சம்பந்தப்படுத்தி ஒரு சில செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.  தேர்தல் வரும் இந்த நேரத்தில் இத்தகைய செய்திகள் எனக்கு அரசியல் ஆசை வந்துவிட்டதோ என்ற ஐயப்பாட்டை பொதுமக்களிடையே விதைக்கும்.

இந்த தருணத்தில் நான் அனைவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால் எனக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அரசியல் ஈடுபாட்டில் எந்த ஆர்வமும் இல்லை.  ஒரு சராசரி பொதுஜனம் ஆக வரிசையில் நின்று வாக்களிப்பது மட்டுமே எனது உச்சகட்ட அரசியல் தொடர்பு. நான் என் ரசிகர்களை குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு ஆதரவளியுங்கள்  என்றோ, வாக்களியுங்கள் என்றோ எப்பொழுதும் நிர்பந்தித்தது இல்ல, நிர்பந்திக்கும் மாட்டேன் நான் சினிமாவில் தொழில்முறையாக வந்தவன். நான் அரசியல் செய்யவோ மற்றவருடன் மோதவோ இங்கு வரவில்லை.  என் ரசிகர்களுக்கும் அதேதான் நான் வலியுறுத்துகிறேன். அரசியல் சார்ந்த அரசியல் சார்ந்த எந்த ஒரு நிலைப்பாட்டை நான் தெரிவிக்கவில்லை. என் ரசிகர்களும் அவ்வாறு இருக்க வேண்டும் என விரும்புகிறேன். சமூக வலைதளங்களில் தரமற்ற முறையில் மற்ற நடிகர்களை, விமர்சகர்களை வசைபாடுவதை என்றுமே ஆதரிப்பதில்லை. நம்மை உற்று பார்க்கும் இந்த உலகம் இத்தகைய செயல்களை மன்னிப்பதில்லை.

அரசியலில் எனக்கு தனிப்பட்ட விருப்பு வெறுப்பு உண்டு. அதை நான் மற்றவர் மீது திணிப்பது இல்லை. என் ரசிகர்களிடம் இதேதான் நான்  எதிர்பார்க்கிறேன். உங்கள் அரசியல் கருத்து உங்களுடையதாக இருக்கட்டும். என் பெயரோ என் புகைப்படமோ எந்த ஒரு அரசியல் நிகழ்விலும் இடம்பெறுவதை நான் சற்றும் விரும்புவதில்லை.

எனது ரசிகர்களிடம் எனது வேண்டுகோள் என்னவென்றால் நான் உங்களிடம் எதிர்பார்ப்பது எல்லாம் மாணவர்கள் தங்களது கல்வியில் கவனம் செலுத்துவதும்,  தொழில் மற்றும் பணியில் உள்ளோர் தங்களது கடமைகளை செவ்வனே செய்வதும், சட்டம் ஒழுங்கை மதித்து நடந்து கொள்வதும், ஆரோக்கியத்தின் மீது கவனம் வைப்பது, வேற்றுமை கலைந்து ஒற்றுமையுடன் இருப்பது, மற்றவர்களுக்கு பரஸ்பர மரியாதை செலுத்துவது, ஆகியவை தான்.  ஆகவே நீங்கள் எனக்கு செய்யும் அன்பு.” வாழு வாழ விடு”.

என்றும் உண்மையுடன்,

அஜித்குமார்

இவ்வாறு சுரேஷ் சந்திரா அஜித் சார்பாக அஜித் வெளியிட்ட அறிக்கையை வெளியிட்டார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top