Tamil Cinema News | சினிமா செய்திகள்
இனிமேல் அஜித் எனக்கு தேவையில்லை என கூறிய கௌதம் மேனன்.. நெத்தியடி பதில் கொடுத்த தல
சினிமாவில் பின்புலம் இல்லாமலேயே உச்ச நாயகனாக வலம் வருபவர் தல அஜித். தமிழகத்தில் தல அஜித்துக்கென்றே பெரிய ஃபேன்ஸ் பட்டாளம் இருப்பதால் அவருடைய படங்கள் எல்லாம் திரையரங்குகளில் தாறுமாறாக ஓடுவது வழக்கம்.
இவ்வாறு இருக்க இயக்குனர் கௌதம் மேனன் மூன்று முறை மீடியாவில் அஜித்தை விமர்சித்து பேட்டி அளித்துள்ளார். அதற்கு அஜித் ஒருமுறை கூட பதிலடி கொடுக்காததால் தல ரசிகர்கள் பெரும் கவலையில் ஆழ்ந்தனர்.
‘இனிமேல் அஜித் எனக்கு தேவையில்லை’ என்று கௌதம் மேனனின் அண்மையில் அளித்த பேட்டியால் கடுப்பாகி, முதல் முறையாக வாய் திறந்துள்ளார் தல அஜித்.
“சினிமாவில் நான் இல்லாமல் 10 படங்களை கௌதம் இயக்கி விட்டார். அவர் இல்லாமல் நான் 50 படங்களை நடித்து முடித்து விட்டேன்” என்று கூறி கௌதம் வாசு மேனனுக்கு சவுக்கடி கொடுத்துள்ளார் தல அஜித்.

gautham-menon-cinemapettai
“மேலும் கார் ரேஸுக்கு போனதால் சினிமாவில் ஒரு இடைவெளி ஏற்பட்டது உண்மைதான். அதற்காக நான் அதிலேயே இருந்து விடுவேன் என்பது அர்த்தமல்ல. இதோ மீண்டும் நான் வந்துவிட்டேன்!” என நான்கே வரியில் கௌதமை ஆப் செய்தார் தல.
‘எந்நிலை மாறாத தன்னிலை கொண்டவர்தான் எங்க தல’ என்று புகழாரம் பாடிக் கொண்டிருக்கின்றனர் தல ரசிகர்கள்.
