Tamil Cinema News | சினிமா செய்திகள்
முரளிக்காக எழுதிய கதையில் நடித்த அஜித்.. பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த படம்
சினிமாவில் கதையை ஒருவருக்கு எழுதி அதில் மற்றொருவர் நடித்து வெற்றி கண்ட படங்கள் நிறைய உள்ளது. அந்த மாதிரி படங்கள் ஒரு சில நடிகர்களுக்கு பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி தரும். அந்த வகையில் நடிகர் முரளி நடிக்கவிருந்த படத்தில் அஜித் நடித்து அவருடைய சினிமா கேரியரில் முக்கிய அம்சமாக அமைந்த படம் முகவரி.
ஒரு 25 வயது பட்டதாரி இளைஞன் தன் கனவுகளுக்காக சமூகத்திடம் அசிங்கப்பட்டு இறுதியில் அந்த கனவை அடைந்தாரா என்பதை உணர்வுபூர்வமாக சொன்ன படம் தான் முகவரி. உண்மையிலேயே முகவரி படம்தான் தல அஜித்துக்கு தமிழ் சினிமாவில் ஒரு முகவரியை கொடுத்தது என்று சொல்லலாம். முதன்முதலாக அஜித்துக்கு AK என்ற டைட்டில் கார்டு வந்ததும் இதில் தான்.
அஜித் ரகுவரன் ஜோதிகா ஆகியோர் நடிப்பில் v z துரை இயக்கத்தில் உருவான படம். உண்மையாலுமே தல அஜித்தின் மனதுக்கு இந்தப்படம் மிகவும் நெருக்கமானதாக ஒரு சில இடங்களில் கூறியுள்ளார். திரையில் தான் நடித்தது போன்றே தெரியவில்லை என்கிற அளவுக்கு இயல்பான கதாபாத்திரத்தில் அழகாக நடித்திருப்பார்.
முதன்முதலில் இந்த கதை நடிகர் முரளியிடம் சென்றது. அவருக்கு முகவரி கதையில் எந்த ஈடுபாடும் இல்லாததால் அந்த கதை தல அஜித் அவர்களுக்கு கிடைத்தது. கிடைத்த பொக்கிஷத்தை அழகாக கையாண்டு தன்னுடைய சினிமா வாழ்க்கையில் திரும்பிப் பார்க்கும் படமாக மாற்றிக்கொண்டார் தல அஜித்.
