தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் கிங்ஸ் என்றால் ரஜினிக்கு பிறகு தல,தளபதி தான் இவர்களின் பட வசூலை இவர்கள் இருவரும் போட்டிபோட்டு முறியடிப்பார்கள் அந்த அளவிற்கு போட்டி வரும் அதேபோல் பல நல்ல படத்தில் சந்தர்ப்ப சூழ்நிலையால் அஜித் நடிக்க மறுத்து வேற நடிகர்கள் நடித்து மாபெரும் ஹிட் ஆகியும் உள்ளது.

thala-ajith
thala-ajith

இதில் யார் அதிக லாபம் பெற்றார் என்றால் சூர்யாதான், ஏன் என்றால் அஜித் நடிக்க மறுத்த சில படங்கள் சூர்யா நடித்து அவர் திரைபயனத்தையே திருப்பி போட்டுவிட்டது,அந்த வகையில் காக்க காக்க,நந்தா,கஜினி,நேருக்கு நேர், என பல படங்கள் அஜித்திற்கு வந்த படங்கள் தான்.

ajith vijay

அதேபோல் விஜய்யின் இரண்டு மெஹா ஹிட் படமும் அஜித்திற்கு வந்ததுதான் தெரியுமா, ஆனால் அஜித் அந்த படத்தில் நடிக்க மறுத்து விஜய் நடித்து ஹிட் ஆனது, ஆம் அந்த படங்கள் கில்லி,கத்தி ஆகிய படங்கள் முதலில் அஜித்திடம் தான் வந்தது ஆனால் இந்த இரண்டு படங்களும் பேச்சு வார்த்தையில் நிற்றுவிட்டது. அதனால் விஜய் நடித்து மெஹா ஹிட் ஆனது இந்த படத்தை தவறவிட்டது ரசிகர்களுக்கு வருத்தம் இருக்கிறது..