ajith-thalaவிஜய் நடித்த ‘தெறி’ படத்தின் ஆடியோ விழாவில் நேற்று ஏராளமான சிறப்பு விருந்தினர்கள் வந்திருந்த நிலையில் இதில் அஜித்தும் இடம்பெற்றிருந்தார் என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

இந்த விழாவில் ஒவ்வொரு முக்கிய செலிபிரிட்டியும் பேசுவதற்கு முன்னர் அவர்களை பற்றிய ஒரு ஆடியோ-வீடியோ தொகுப்பு ஒன்று திரையிடப்பட்டது. இதன்படி தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு முறை வந்தபோது அவர் தயாரித்த படங்கள் குறித்த தொகுப்பு அடங்கிய வீடியோ ஒன்று வெளியானது. இதில் கடந்த 2000ஆம் ஆண்டு தாணு தயாரித்த ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்தின் ஸ்டில் வெளிவந்தது. இதில் அஜித்தும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் அஜித் பெயரும் ‘தெறி’ ஆடியோ விழாவில் இணைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விழா விஜய் பட விழாவாக இருந்தபோதிலும் அஜித் பட ஸ்டில் திரையில் தோன்றியபோது கைதட்டல் சத்தம் விண்ணை பிளந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் விஜய், இயக்குனர் மகேந்திரன் ஆகியோர் பேசுவதற்கு முன்பும் ஒரு சிறப்பு வீடியோ ஒளிபரப்பப்பட்டது.